Published : 05 Sep 2016 10:08 AM
Last Updated : 05 Sep 2016 10:08 AM
கேரளத்துக்கு அடிமாடாக அனுப் பப்பட்டு பலியாவதைத் தவிர்க்க, தாங்கள் ஆசையோடு வளர்த்து வந்த காளைக் கன்றுகளை தேனி மாவட்ட விவசாயிகள் ‘பூம்பூம்’ மாட்டுக்காரர்களுக்குத் தானமாக கொடுத்து வருகின்றனர்.
தேனி மாவட்ட மக்களில் சிலர் விவசாயத் தொழில் செழிப்பாக இருக்கவும், நோய்கள் தீரவும், தங்களது குல தெய்வத்துக்கோ அல்லது மற்ற கோயிலுக்கோ வேண்டிக்கொள்கின்றனர். வேண்டு தல் நிறைவேறியவுடன் காளைக் கன்றுகளை கோயிலுக்கு நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர். இந்த மாடுகள் கோயில்களில் சரியாக பராமரிக்கப்படாமல் அவிழ்த்து விடப்படுவதால், தெரு ஓரங்களில் கிடக்கும் பொருட்களை உட்கொள் கின்றன. ஒருசில நேரங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை உண்பதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது.
சில கோயில்களில் மாடுகளைப் பராமரிக்க முடியாமல் ஆண்டு தோறும் ஏலம் விடப்படுகிறது. இதில் ஏலம் எடுக்கப்படும் காளை மாடுகள் கேரளத்துக்கு அடிமாடாக அனுப்பப்பட்டு ஹோட்டல்கள், வீடுகளில் இறைச்சிக்காக விற்கப் படுகின்றன. மேலும் அங்கு இருந்து வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி மொத்தமாக ஏற்றுமதி செய்யப்படு கிறது. இதனால் மன வேதனை அடைந்த தேனி மாவட்ட விவசாயி கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற வும், தங்களது மாடுகள் உயி ரோடு இருக்கவும் ‘பூம்பூம்’ மாட்டுக் காரர்களுக்கு காளைக் கன்றுகளை தானமாக கொடுக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக பூம் பூம் மாட்டுக்காரர்கள் தேனி மாவட் டத்துக்கு வந்து விவசாயிகளால் தானமாக வழங்கப்படும் மாடுகளை வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து ‘தி இந்து’விடம் மதுரை எஸ்.கே.டி. நகரைச் சேர்ந்த பூம்பூம் மாட்டுக் காரர் அண்ணாமலை கூறிய தாவது:
நேர்த்திக்கடனை நிறைவேற்ற தானமாக கொடுக்கப்பட்ட காளைக் கன்றுகளை நாங்கள் வாங்கிச் சென்று ‘பூம்பூம்’ மாடாக மாற்ற பயிற்சி அளிப்போம். முதலில் முரண்டு பிடிக்கும் மாடுகள் பின்னர் பழக்கப்பட்டுவிட்டால் சரியாகிவிடும். அதன்பிறகு அந்த மாடுகளை அழைத்துக்கொண்டு ஊர், ஊராக சுற்றுவோம்.
கூடுதலாக மாடுகள் இருந்தால் எங்கள் இனத்தைச் சேர்ந்த மற்ற வர்களுக்கு கொடுத்துவிடுவோம். கடந்த 2 ஆண்டுகளில் நாங்கள் தேனி மாவட்டத்தில் சில மாடுகளைத் தானமாகப் பெற்றுள்ளோம். எங் களைப்போல் பலர் ஏராளமான மாடுகளைத் தானமாகப் பெற்றுச் சென்றுள்ளனர். தானமாக பெற்ற மாட்டை ஆண்டுதோறும் தை மாட் டுப் பொங்கல் அன்று மாடுகளின் உரிமையாளர்கள் வீட்டுக்கு அழைத்து வருவோம். அவர்கள் அந்த மாட்டை குளிப்பாட்டி, பொட்டு, பூ வைத்து, தீவனம் கொடுத்து வழிபடுவார்கள். 2 நாட்கள் அந்த மாடு அவர்களுடன் இருக்கும்.
பின்னர் மாட்டை மீண்டும் எங்களிடம் கொடுத்துவிடுவார்கள். அப்போது எங்களுக்கு புதிய வேட்டி, துண்டு மற்றும் செலவுக்குப் பணம் தருவார்கள். அதனை நாங்கள் பெற்றுக்கொண்டு எங்கள் பிழைப்பைத் தேடி ஊர், ஊராகச் செல்வோம். நேர்த்திக்கடனை நிறை வேற்ற கோயிலுக்குக் கொடுத்த காளை மாடுகள் அடிமாடாக சென்று பலியாகாமல் உயிருடன் இருப்பதைப் பார்த்து மாடுகளின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடை வார்கள். அதைப் பார்க்கும்போது எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT