Published : 26 Jun 2016 09:41 AM
Last Updated : 26 Jun 2016 09:41 AM
மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் முறை ரத்தால், அதிமுகவில் கவுன்சிலர்கள் கட்சி மாறி வாக்களிப்பதை தடுக்க கட்சி விசுவாசிகளுக்கே சீட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, வேலூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் என 12 மாநகராட்சிகள் உள்ளன. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர்களை மக்களே வாக்களித்து தேர்வு செய்யும் முறை நடைமுறை யில் இருந்தது. இந்த உள்ளாட்சித் தேர்லில் மாநகராட்சி மேயர்களை கவுன்சிலர்களே தேர்வு செய் யும் புதிய நடைமுறை அமல் படுத்தப்படுகிறது.
இதற்கான சட்ட திருத்த மசோதா, அண்மை யில் சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்டுள்ளது. அதனால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் மேயரை தேர்வு செய்ய கவுன் சிலர்களுடைய பங்கும், அவர் களின் ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எனக் கருதப்படுகிறது. கவுன்சிலர் தேர்தல் முடிந்ததும், அதில் தேர்வானவர்கள் கூடி மேயரை மறைமுக வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்வர். இதில் கவுன்சிலர்கள் யாருக்கு வாக் களித்தனர் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. அதனால், கவுன்சிலர்கள் திரைமறைவு பேரத்தில் ஈடுபட்டு சொந்த கட்சி சார்பில் நிறுத்தப்படும் மேயர் வேட்பாளர்களுக்கு வாக் களிக்காமல் மாற்றுக்கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது.
கடந்த காலத்தில், இந்த முறையில் நடந்த மேயர், நகராட்சித் தலைவர் தேர்தலில் இதுபோல கவுன்சிலர்கள் கட்சி மாறி வாக்களித்ததற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. அதனால், அதிமுகவில் இந்த முறை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் கட்சி விசுவாசிகளுக்கு மட்டுமே சீட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.
நிர்வாகிகள் விளக்கம்
இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது: மக்களால் மேயர் தேர்வு செய்யப் படாததால், கட்சி முடிவு செய்யும் யாரும் மேயராக வாய்ப்புள்ளது. அதனால், கடந்த முறையைபோல மேயர் தேர்தலில் கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவ சியம் இல்லை. செலவே இல்லா மல் மேயராக அதிமுகவில் வாய்ப்புள்ளதால், முக்கிய நிர்வாகி கள் முதல் கடைநிலை நிர்வாகி கள் வரை, இந்த முறை கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட ஆர்வமடைந்துள்ளனர்.
கட்சித் தலைமை மீது விசு வாசம் இல்லாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் மாற்றுக் கட்சி யினரின் குதிரைபேரத்துக்கும், சொந்த கட்சி வேட்பாளரை பிடிக்காத அதிருப்தியிலும், மாற்றுக்கட்சியினருக்கு வாக் களிக்க வாய்ப்புள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் முழுக்க முழுக்க கட்சிக்கு அப்பாற்பட்டு அங்கு போட்டியிடும் நபர்களை பார்த்தே மக்கள் வாக்களிக்க வாய்ப்புள்ளது.
அதனால், இந்த முறை மாவட்ட செயலர்கள், கட்சியினர், மேலிட நிர்வாகிகள் மற்றும் உளவுத்துறை மூலம் ஆய்வு செய்து கட்சியில் நீண்டநாள் பணியாற்றும் செல்வாக்குள்ள நிர்வாகிகள், சோதனைகளை சந்தித்த காலங்களில் கட்சி மாறாத நிர்வாகிகள், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் பகுதிகளில் கூடுதல் வாக்குகள் பெற்றுக்கொடுத்த வட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது என அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT