Published : 16 Jun 2017 11:56 AM
Last Updated : 16 Jun 2017 11:56 AM

தலைமுறை தலைமுறையாக வசிக்கும் வனத்தை விட்டு வெளியே வந்து கூட்டமாக வசிக்க விரும்பும் பழங்குடியின மக்கள்: மனது வைக்குமா திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்?

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தாங்கள் பல தலைமுறைகளாக வசிக்கும் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து கூட்டாக ஒரே பகுதியில் வசிக்க விருப்பப்பட்டு அரசை வலியுறுத்தி வருகின்றனர். இவர் களின் விருப்பத்தை நிறை வேற்ற மாவட்ட நிர்வாகம் முன்வருமா என்ற எதிர்பார்ப்பு பழங்குடியின மக்களிடம் உள்ளது.

சிறுமலை பகுதியில் பழங்குடியின மக்கள் காடுக ளுக்குள் வசிக்கின்றனர். பல தலைமுறைகளாக வனப் பகுதிக் குள் வசித்துவரும் இவர்கள் பாரம்பரியமாக சிறிய இடத்தில் விவசாயம் செய்கின்றனர். இவர் களுக்கு அனுபவ பாத்தியம் மட்டுமே உள்ள இடத்தில் இவர்கள் பெயரில் பட்டா இல்லை. சிறிய வீடுகள் அமைத்து அவர்கள் பயன்படுத்தும் இடத்தில் சிறிது விவசாயமும், மலைப்பகுதியில் உள்ள தனியார் பண்ணை நிலங்களில் விவசாய கூலிகளாக சென்றும் பொருள் ஈட்டுவதுமே தங்கள் வாழ்வாதாரமாக கொண் டுள்ளனர். சிறுமலை ஊராட்சி, தென்மலை அருகே பொன்னுருக்கி என்ற பகுதியில் வசித்துவரும் இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சாலை வசதி செய்து தந்துள்ளது.

இதுவரை மின்வசதி இவர்களுக்கு கிடைக்கவில்லை. இப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தபோதும் அடுத்தடுத்த வீடுகள் என ஒரே கிராமமாக இவர்கள் வசிக் கவில்லை. ஒரு இடத்தில் இரு வீடுகள் இருந்தால் சற்று தொலைவில் ஒரு வீடு என ஆங்காங்கே வீடுகள் என பரவலாக வசித்துவருகின்றனர். இவர்கள் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்வசதி வேண்டும் என்றும், தாங்கள் ஒரே பகுதியில் குடியிருப்பு பகுதிகளாக வாழ விருப்பம் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர். இதற்காக மலைப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்கி வீடுக ட்டித்தர உதவவேண்டும் எனவும் பழங்குடியின மக்கள் விரு ப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொன்னுருக்கியில் வசித்துவரும் லட்சுமணன் கூறி யதாவது: வீடுகள் ஆங்காங்கே இருப்பதால் குடிநீர், மின் வசதி செய்து தருவதில் சிக்கல் உள்ளது. இதனால் ஒரே பகுதியில் 50 குடும்பத்தினரும் வசிக்க ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். இதற்கு வீட்டுமனைப்பட்டா, வீடு கட்டித்தர உதவி ஆகியவற்றை வழங்கினால் வனப்பகுதிகளில் இருந்து வெளியே வந்து நாங்கள் ஒரே இடத்தில் கிராமம் போன்று வசிக்க ஏதுவாக இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

பொன்னம்மாள் கூறிய தாவது: சிறு வயது முதலே நான் வனப்பகுதியில் வசித்து வந்துவிட்டேன். வயதான கால த்தில் தண்ணீர் எடுக்க சிறு ஓடைகளை நாடி தொலைதூரம் சென்று வருவது என்பது சிரமமான காரியமாக உள்ளது. எனது இறுதிக் காலத்திலாவது பொன்னுருக்கி பகுதியில் பழங் குடியின குடும்பங்களுக்கு ஒரே இடத்தில் வீடுகள் அமைத்துக் கொடுத்தால் அடிப்படை தேவை களை நிறைவேற்ற அரசுக்கும் வசதியாக இருக்கும் என்றார்.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது: வன உரிமை சட்டப்பட்டி பொன்னுருக்கி பகுதியை சேர்ந்த 51 பேர் பட்டா கேட்டு மனுகொடுத்துள்ளனர். இவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தகுதியிருந்து, சிறுமலை பகுதியில் புறம்போக்கு நிலங்கள் கண்டறியப்பட்டால் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x