Published : 01 Apr 2017 08:55 AM
Last Updated : 01 Apr 2017 08:55 AM

ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர், செயலாளர்களுக்கு அழைப்பு: அரசியல் பட்டாபிஷேகத்துக்கு ரஜினி ஒத்திகையா?

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஏப்ரல் 2-ம் தேதி சென் னைக்கு அழைத்திருப்பதன் பின்னணியில் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்று குரல் கொடுத்த நாள் முதல் தேர்தலுக்குத் தேர்தல் ரஜினியின் அரசியல் பிரவேசம் அல்லது எந்தக் கட்சிக்கு அவரது ஆதரவு என்ற இரண்டு விஷயங்கள் தமிழக அரசியலில் பிரதானமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ரஜினியின் வீட்டுக்கே சென்று ஆதரவு கேட்டார் பிரதமர் மோடி. அப்போது மறுத்து விட்ட ரஜினியை தற்போது அமித்ஷா - மோடி கூட்டணி தங்கள் பக்கம் ஈர்ப்பதில் ஓரளவு வெற்றி கண்டிருப்பதாக பாஜக தரப்பினர் கூறுகின்றனர்.

“மக்கள் செல்வாக்கு உள்ள ஒரு பிரப லத்தை முன்னிறுத்தி தமிழகத்தில் தாங்கள் நினைத்ததை சாதிக்கத் துடிக்கிறது அந்தக் கட்சி. அதற்காகத்தான், ஜெயலலிதா மறைவையும், கருணாநிதியின் உடல்நலக் குறைவையும் தொடர்ந்து, மறுபடி பாஜக தலைமை ரஜினிகாந்த்தை ஈர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது” என்கிறது பாஜக வட்டாரம்.

தற்போது உள்ள அரசியல் வெற்றிடத்தை சுட்டிக்காட்டி, ‘உங்கள் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அறக்கட்டளை ஒன்றை தொடங்குங்கள். அதன் தொடக்க விழாவுக்கு பிரதமர் மோடி வருவார். அறக்கட்டளை மூலம் ரசிகர்களைக்கொண்டு மக்கள் நலப் பணிகளை செய்யுங்கள். தேர்தல் சமயத்தில் உங்களின் நேரடி அரசியல் பிரவேசம் குறித்து முடிவு செய்துகொள்ளலாம்’ என்று பாஜக தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாகவும் தெரிகிறது என்கிறது ரஜினிக்கு நெருக்கமான காங்கிரஸ் வட்டாரம்.

இந்நிலையில்தான், அறக்கட்டளை அலுவலகத்துக்காக சென்னை தியாகராய நகரில் இடம் பார்க்கப்பட்டு வருவதாகவும் வெகு காலம் கழித்து ரசிகர் மன்ற பொறுப் பாளர்களை சந்திக்க ரஜினி முடிவெடுத்த தாகவும் சொல்கின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலைவர், செயலாளர் இருவர் மட்டுமே சென்னைக்கு வரவேண்டும். கூட்டம் திரட்டிக்கொண்டு வரக்கூடாது என ரஜினி தரப்பில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டு களாக ரஜினி மன்றம் சம்பந்தப்பட்ட பணி களை மன்றப் பொறுப்பாளர் சுதாகர்தான் கவனித்து வருகிறார். ஆனால், இம்முறை சுதாகரும் சத்யநாராயணாவும் சேர்ந்தே மன்றப் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

போட்டோ எடுப்பதற்காகவா?

அழைப்பின் முக்கியத்துவம் குறித்து நம்மிடம் பேசிய சிவகங்கை மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர்களில் ஒருவரான ஜே.பி.ரவி, “இருபது நாட்களுக்கு முன்பே மன்றத் தலைமையில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்களின் பட்டியலைக் கேட்டார்கள். மன்றப் பொறுப்பாளர்கள் ரஜினியோடு போட்டோ எடுத்துக்கொள்வதற்காக இந்தப் பட்டியல் கேட்கப்படுவதாகச் சொல்லப்பட்டது.

எங்களை ரஜினி சந்திப்பாரா என்பது கூட உறுதியாகத் தெரியவில்லை. பொறுப் பாளர்களை மாவட்டவாரியாக ஒழுங்கு படுத்த ஆலோசனைகளை வழங்கக்கூட எங்களை அழைத்திருக்கலாம். இந்த சந்திப்பின்போது, அரசியல் பிரவேசம் பற்றி எங்களிடம் கருத்து கேட்டால், அரசியலுக்கு வருவதற்கு இதைவிட நல்ல தருணம் அமையாது என்பதை நாங்கள் கட்டாயம் வலியுறுத்துவதாக இருக்கிறோம்’’ என்றார்.

ரஜினி பாஜக-வில் இணையலாம் என்கிறார்களே என்று கேட்டபோது, “அதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. அப்படி நினைத்திருந்தால் மோடி 3 முறை தன்னை வீடு தேடி வந்து கேட்டபோதே அதற்கு சம்மதித்திருப்பாரே’’ என்றார்.

படத்தை ஓடவைக்க திட்டமா?

சிவகங்கை மாவட்ட முன்னாள் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களான ரவிச்சந்திரனும் சிவாவும் ‘ரஜினி மக்கள் கழகம்’ என்ற கட்சியையும் அதற்கு தனி கொடியையும் பிரகடனம் செய்ததற்காக மன்றப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் கூறும்போது, “தனது படம் வெளியாகும்போதெல்லாம் இப்படி ஏதாவது பரபரப்பை பற்ற வைப்பது ரஜி னிக்கு கைவந்த கலை. இப்போது ‘எந்தி ரன் 2’ படம் வரப்போகிறது. அரசியல் வாதிகளின் எதிர்ப்புகளைத் தாண்டி அந்தப் படத்தை ஓடவைக்க வேண்டுமானால், என் பக்கம் ரசிகர் மன்றத்துப் படை இருக் கிறது பார் என்று காட்டியாக வேண்டும். அதற்காகத்தான், இத்தனை நாளும் கண்டு கொள்ளாமல் இருந்த ரசிகர் மன்றத்தினரை விரும்பி அழைத்திருக்கிறார்.

இதுவரை மன்றப் பொறுப்பாளர்கள் எத்தனையோ பேர் இறந்திருக்கிறார்கள். எத்தனையோ பேர் ரஜினிக்காக சொத்து சுகத்தை இழந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாத ரஜினி, இறந்தவர்களுக்காக இரங்கல்கூட தெரி விக்க நேரமில்லாத ரஜினி, எந்த காரண முமே இல்லாமல் ரசிகர்களை திடீரென்று சந்திக்க வேண்டியது ஏன்? அந்தக் கூட்டத் தில் இவர் பேசுவதை நம்பி கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் ‘எந்திரன் 2’ படத்தின் வெற்றிக்காக வேலை பார்த்து ஏமாறப் போகிறார்கள்’’ என்றனர்.

படத்தை சிக்கலின்றி ஓடவைப்பதற்கான வழக்கமான உத்தியா அல்லது ரஜினி அரசியல் பட்டாபிஷேகம் சூடிக்கொள்வ தற்கான ஆரம்பக்கட்ட ஒத்திகையா என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x