Published : 09 Feb 2014 11:04 AM
Last Updated : 09 Feb 2014 11:04 AM

குடிநீர், மின்சார பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்: அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

அத்தியாவசியத் தேவையான குடிநீர், மின்சார பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இதுவரை கண் டிராத வகையில் ஜனவரி, பிப்ரவரி யிலேயே குடிநீர் தட்டுப்பாடு தொடங்கியுள்ளது. பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு இருந்தாலும் திருநெல்வேலி, விருதுநகர், திருப்பூர், சேலம், மதுரை போன்ற மாவட்டங்களில் வாரம் ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுவதாக சொல்லப் படுகிறது.

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சினையும் இதே போன்றதுதான். 2009-ல் தேமுதிக சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம், போராட்டத்தின் விளைவாகவும், எனது அறிக் கைக்கு பதில் அளிக்கும் விதமாகவும் அன்றைய திமுக அரசு 7,000 மெகாவாட் அளவுக்கு மின்உற்பத்தி நிலையங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன் ஒரு பகுதிதான் தற்போது தமிழக மின் உற்பத்தியோடு இணைக்கப் பட்டுள்ள 700 மெகாவாட் மின் உற்பத்தி திறன் ஆகும்.

இதைத்தான் முதல்வர் ஜெயலலிதா மின்துறையில் கடந்த 2 ஆண்டுகளில் அவரது சாதனையாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் அன்றாட மின் உற்பத்தி மற்றும் பகிர்மான தகவல் அறிக்கையின்படி காற்றாலை பங்களிப்பு இல்லாமல் மொத்த மின் உற்பத்தி நிறுவு திறன் 10,550 மெகாவாட் ஆகும். மின் பற்றாக்குறை 3,500 மெகாவாட் என்று கணக்கிடப்படுகிறது.

கடந்த காலங்களில் போதிய மின்உற்பத்தி திட்டங்களை தீட்டாததும், அறிவித்த மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதில் தமிழக அரசின் மெத்தனத்தால் ஏற்பட்ட தாமதமும்தான் தமிழகத் தில் நிலவும் மின் வெட்டுக்கு காரணம். அதைவிடுத்து, மின் வெட்டுக்கு ஏதோ மத்திய அரசுதான் காரணம் என்பதுபோல முதல்வர் பேசுவது மக்களை திசைதிருப்பி, பொறுப்பை தட்டிக்கழிப்பதாகும் என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x