Published : 28 Jul 2016 11:34 AM
Last Updated : 28 Jul 2016 11:34 AM

மதுரை பெண் கவுன்சிலர்கள் வார்டுகளில் கணவர்கள் ஆதிக்கம்: தேர்ந்தெடுத்த பிரதிநிதியை சந்திக்க முடியாமல் மக்கள் தவிப்பு

மதுரை மாநகராட்சியில், பெரும்பான்மை பெண் கவுன்சிலர் வார்டுகளில் அவர்களுடைய கணவர்களே ஆதிக்கம் செலுத்துவதால் தாங்கள் தேர்வு செய்த மக்கள் பிரதிநிதியை சந்திக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் 35 வார்டுகளில் பெண் கவுன்சிலர்கள் உள்ளனர். வார்டுகளில் சாலை, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான முக்கிய அடிப்படை தேவைகளை தடையின்றி பெற்று கொடுப்பது, புதிய வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்து கட்டமைப்புவசதிகளை மேம்படுத்துவது, மக்கள் தெரிவிக்கும் பிரச்சனைகள், ஆலோசனைகளை மாநகராட்சி கூட்டங்களில் தெரிவித்து அதற்கு தீர்வும் காணுவது உள்ளிட்டவை கவுன்சிலர்களுடைய முக்கிய பணியாக இருக்கிறது.

ஆனால், மதுரை மாநகராட்சி பெரும்பாலான வார்டுகளில் சாலை வசதியில்லை. திரும்பிய பக்கமெல்லாம் சாக்கடை கால்வாய், பாதாள சாக்கடை உடைந்து தெருக்களில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஒடுகிறது. பல வார்டுகளில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீருடன் கழிவு நீர் கலக்கிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் காமாலை, கலாரா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவுகிறது.

சில நாளுக்கு முன், மதுரை அருள்தாஸ் புரத்தில் கர்ப்பிணி பெண் மஞ்சள் காமாலைக்கு பலியானார். 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பாதாள சாக்கடைகளுக்காக பல இடங் களில் குழி தோண்டிப்போட்டு மூடப்படாமல் அந்த குழிகளில் இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் விழுந்து பலியான சம்பவங்கள் நடந்துள்ளது. குடிநீர் விநியோகம் என்பது, மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் திறந்துவிட்டதும் வீடுகளில் இருக்கும் குடிநீர் குழாய்களில் தானாக வந்து விழ வேண்டும். ஆனால், மாநகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் குழாய்களில் குடிநீர் வருவதில்லை. பொதுமக்கள், பழங்காலத்தை போல் கை அடி பம்புகளை வைத்து அடித்து குடிநீர் பிடிக்கும் அவலம் ஏற் பட்டுள்ளது. சில இடங்களில் மின்மோடரை கொண்டு குடிநீர் உறிஞ்சப்படுகிறது. பொதுமக்கள், இதபோன்ற பல குறைகள், கோரிக்கைகளை கவுன்சிலர் வீடுகளுக்கு சென்று அவர்களை சந்திக்கவோ, அவர்களுடைய செல்போன்களில் தொடர்பு கொண்டாலே பெண் கவுன்சிலர் வார்டுகளில் அவர்களை சந்திக்க முடியவில்லை. கணவர்களைதான் சந்தித்து சொல்ல வேண்டிய இருக்கிறது.

மாநகராட்சியின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் போட்டுள்ள பெண் கவுன்சிலர் தொலைபேசி என்களில் தொடர்பு கொண்டால் அவர்கள் கணவர்களே எடுக்கி ன்றனர். மாநகராட்சி கூட்டங்கள், ஆய்வுக்கூட்டங்களில் மட்டுமே பங்கேற்கும் அதிகாரம் மட்டுமே பெண் கவுன்சிலர்கள் பெற்று ள்ளனர். இவர்கள் செயல்பாடுகள் கணவர்களை சார்ந்தே இருக்கிறது.

இதுகுறித்து பெண் கவுன்சி லர்கள் சிலரிடம் கேட்டபோது, மக்களிடம் நெருக்கமாக இருப்பது பெண் கவுன்சிலர்கள்தான். நாங்கள் பெண் பிரதிநிதியாக இருப்பதால் பெண்கள் எளிதாக எங்களை அணுக முடிகிறது. கணவர்கள் எங்களுக்கு வழிகாட்டியாகவே உள்ளனர். வார்டு பிரச்சனைகளில் நெருக்கடியோ, அவர்கள் தலையிடோ இல்லை. ஒருசில பெண் கவுன்சிலர் செயல்பாடுகள் சரியில்லை என்பதற்காக ஒட்டு மொத்த பெண் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டுவது சரியில்லை, என்றனர்.

மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டபோது மாநகராட்சி கூட்டங்களிலும், நாங்கள் வார்டுகளில் ஆய்வுக்கு செல்லும்போதும் பெண் கவுன்சிலர்கள்தான் வருகின்றனர். அவர்களுடைய வார்டு தேவைகள், பணிகளை பற்றியும், கோரிக்கை மனுக்களையும் அவர்கள்தான் எங்களிடம் தெரிவிக்கின்றனர். எங்கள் அதிகாரத்திற்கு அப்பா ற்பட்டு திரைமறைவில் நடக்கும் விஷங்களில் மாநகராட்சி தலையிட முடியாது.

வார்டு பிரச்சனைகளில் பெண் கவுன்சிலர் கணவர்களால் பாதிக்கப்பட்டதாக இதுவரை யாரும் புகார் தெரிவிக்கவில்லை. தெரிவித்தால் நடவடிக்கை எடுக் கப்படும், என்றார்.

பாதாள சாக்கடைகளுக்காக பல இடங் களில் குழி தோண்டிப்போட்டு மூடப்படாமல் அந்த குழிகளில் இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் விழுந்து பலியான சம்பவங்கள் நடந்துள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x