Last Updated : 02 Sep, 2016 09:59 AM

 

Published : 02 Sep 2016 09:59 AM
Last Updated : 02 Sep 2016 09:59 AM

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் பெயர்களில் புதிய ரக பட்டாசுகள் தயாரிப்பு

இளைஞர்களைக் கவரும் வகை யில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், ஸ்கைப் போன்ற சமூக வலைதளங்களின் பெயர்களைக் கொண்ட புதிய ரக பட்டாசுகள் சிவகாசியில் இந்த ஆண்டு தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் சிவ காசி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம், மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் உரிமம் பெற்ற 850-க் கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் சுமார் 95 சதவீதத்தை சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசுகள் பூர்த்தி செய்கின்றன.

தொடக்கத்தில் ஊசி வெடிகள் போன்ற சோல்சா வெடிகள், சரவெடி கள், பொட்டு வெடி, ரோல்கேப், லட்சுமி வெடிகள், குருவி வெடி, ஓலை வெடி, அணுகுண்டு வெடி, தீப்பெட்டி மத்தாப்பு, கம்பி மத்தாப்பு போன்ற பட்டாசு ரங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. அதன்பின் ஆண்டுதோறும் புதுப் புது பட்டாசு ரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந் தன. அந்த வகையில் தற்போது சுமார் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு ரகங்கள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

வடமாநிலங்களில் வறட்சி மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஆண்டு பட்டாசு விற்பனை சரிந்தது. இதனால், சிவகாசியில் உள்ள பெரும்பா லான பட்டாசு ஆலைகளில் கோடிக் கணக்காண ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்தன. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளது. இருப்பி னும், இளைஞர்களைக் கவரும் வகையில் இந்த ஆண்டு சிவகாசி யில் சமூக வலைதளங்களின் பெயர் களைக்கொண்டு பல பட்டாசு ரகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி கூறியதாவது: இந்த ஆண்டு பட்டாசுக்கான ஆர்டர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். விநாயகர் சதுர்த்திக்குப் பின்னர் வியாபாரிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். பட்டாசு வாங்க வருவோர் இந்த ஆண்டு என்ன ரகம் புதிதாக வந்துள்ளது என கேட்டு வாங்குகிறார்கள். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ரகங்களைத் தயாரித்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த ஆண்டு, சமுதாய வலைதளங்களின் பெயர் களில் ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப், வாட்ஸ்அப் போன்ற பெயர்களில் ஃபேன்ஸி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், கார்ட்டூன் கதாபாத்திரங்களின் பெயர்களைக் கொண்ட ஆங்ரி பேட்ஸ், கிளாஸ்-ஆப் கிளான்ஸ், தண்டர்பேர்டு, லூனிடியூன்ஸ் போன்ற பட்டாசு ரகங்களும், ஸ்டார் ரெயின், பவர் ரெயின், ஹைடெக், ஸ்பிரிங், டிராகன் போன்ற ஃபேன்ஸி ரக பட்டாசுகளும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன என்றார்.

பட்டாசு விற்பனையாளரான சிவகாசியைச் சேர்ந்த கணேஷ் கூறியதாவது: இளைஞர்கள் சமூக வலைதளங்களை தற்போது அதிக மாக பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று, சிறுவர்களுக்கும் கார்ட்டூன் மோகம் உண்டு. பொது வாக இளைஞர்கள் மற்றும் சிறுவர் களிடையே பட்டாசு வெடிக்கும் பழக்கம் அதிகம். அதனால் அவர் களைக் கவரும் வகையில் சமூக வலைதளங்கள் மற்றும் கார்ட் டூன் கதாபாத்திரங்களின் பெயர் களில் பட்டாசு மற்றும் ஃபேன்ஸி ரக மத்தாப்புகள் தயார் செய்யப் பட்டுள்ளன. இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x