Published : 07 Mar 2014 10:15 AM
Last Updated : 07 Mar 2014 10:15 AM

திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு?

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக-வின் தேர்தல் அறிக்கை நாளை (சனிக்கிழமை) வெளியிடப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

திமுக தரப்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் சுமார் ஒருவார காலமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாய் ஈடுபட்டனர். பணிகளை முடித்து இந்த வாரத் தொடக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியிடம் தேர்தல் அறிக்கையின் மாதிரி வடிவத்தை சமர்ப்பித்தது குழு. இதில் திருத்தங்கள் ஏதும் இருந்தால் அதை சரிசெய்த பிறகு தேர்தல் அறிக்கையை கருணாநிதி வெளியிடுவார்.

“தேர்தல் அறிக்கையில் உள்ள விவரங்களை அது வெளியிடப்படும்வரை ரகசியம் காக்க வேண்டும் என்பது தலைமையின் உத்தரவு’’ என்று கருத்து தெரிவித்த குழுவில் உள்ள முக்கியத் தலைவர், “இலங்கைப் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டும் அறிவிப்புகள், சேது சமுத்திரத் திட்ட செயலாக்கம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்

களுக்கான தீர்வுகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தள்ளிப் போனால் தேர்தல் அறிக்கை வெளியிடுவதும் ஓரிரு நாட்கள் தள்ளிப் போகலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x