Published : 05 Aug 2016 09:01 AM
Last Updated : 05 Aug 2016 09:01 AM
உள்ளாட்சித் தேர்தலுக்கு தொண் டர்களை தயார்படுத்தும் வகையில் 25 மாவட்டங்களுக்கான செயல் வீரர்கள் கூட்டத்தை தேமுதிக நடத்தி முடித்துள்ளது. மீதமுள்ள மாவட்டங்களுக்கான கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படவுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட இடங்கள் அனைத் திலும் தோல்வியை தழுவிய தேமுதிக, சமீபத்தில் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகியது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பும், பின்பும் சுமார் 18 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதனால், தொண்டர்கள் பலர் சோர்வடைந்ததாக கூறப்படவே, அவர்களை உற்சாகப்படுத்தும் முயற்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஈடுபட்டார்.
நிர்வாகிகள் பலர் வெளியே றினாலும், தேமுதிகவின் உண்மை யான அடித்தளமாக ஊரக பகுதி களில் உள்ள நிர்வாகிகளையும், தொண்டர்களையுமே கட்சித் தலைமை நம்புகிறது. ஏனென்றால், தேமுதிக ஆரம்பிப்பதற்கு முன்பு, ரசிகர் மன்றமாக இருந்த காலத்தில் மன்ற நிர்வாகிகள் பலர் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளில் இருந்தனர். எனவே, பழைய பாணியில் உள்ளாட்சி அமைப்புகளில் கணிசமான அளவு நிர்வாகிகளை இடம்பெறச் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள தேமுதிக தலைமை திட்டமிட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக மாவட் டம், ஒன்றியம், நகரம், பேரூராட் சிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து விஜய காந்தே நேரில் சந்தித்து, கட்சி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார். “தோல்விகளையும், விலகி செல்பவர்களையும் பற்றிக் கவலைப்படாமல், அடுத்தகட்டப் பணிகளை மேற்கொள்ளுங்கள்” என்று நிர்வாகிகளுக்கு விஜய காந்த் உற்சாகம் அளித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், கிராமங்களில் உள்ள கட்சியின் அடிப்படை நிலை நிர் வாகிகள் மற்றும் தொண்டர்களை உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் படுத்தும் நோக்கில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டமும் நடத்தப் பட்டு வருகிறது. மாவட்டத் தலை நகரங்களில் மட்டுமன்றி மாவட்டத் துக்கு உட்பட்ட நகராட்சி, பேரூ ராட்சி என முக்கிய பகுதிகளிலும் இக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் தேமுதிக தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி மற்றும் பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் பங்கேற்று உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
தேமுதிகவில் அமைப்பு ரீதியாக 59 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில், 25 மாவட்டங்களுக்கான செயல்வீரர் கூட்டம் நேற்றோடு நிறைவடைந்தது. எஞ்சிய 34 மாவட்ட கூட்டங்களை இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் நடத்த தேமுதிக திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங் கோவன் ‘தி இந்து’ விடம் கூறும் போது, “தேமுதிகவின் அடித்த ளமே தொண்டர்கள்தான். எனவே, உள்ளாட்சித் தேர்தலுக்காக தொண் டர்களைத் தயார்படுத்தும் வகை யில் மாவட்டந்தோறும் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்த விஜய காந்த் அறிவுறுத்தினார். அதன் பேரில், 25 மாவட்டங்களில் கூட்டங் களை முடித்துள்ளோம் ஆரம்ப காலத்தில் எப்படி கட்சியை வளர்த் தோமோ அதே மாதிரி கடினமாக உழைக்க வேண்டும் என்று தொண் டர்களை அறிவுறுத்தி வருகி றோம். உள்ளாட்சித் தேர்தலை கூட்டணியோடு சந்திப்பதா இல்லை தனித்து எதிர் கொள்வதா என்பது பற்றி எங்கள் தலைவர் விரைவில் அறிவிப்பார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT