Published : 03 Aug 2016 10:47 AM
Last Updated : 03 Aug 2016 10:47 AM
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு செய்துள்ள முடிவுக்கு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1972-ம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்து, அதை பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது ஏறத்தாழ 13,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிறுவனத்தின் முக்கிய மான பணி, நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து, அதை அரவை செய்து, பொது விநியோகத் திட்டத்துக்கு அனுப்புவது தான்.
பதவி உயர்வுக்கு காத்திருப்பு
இந்த நிறுவனத்தில், தற்போது இளநிலை உதவியாளர், தட்டச்சர், இளநிலை தரக்கட்டுப்பாடு அலு வலர்கள் துறைரீதியான தேர்வை எழுதித் தேர்வாகி, அடுத்த நிலை பதவி உயர்வுக்காகக் காத் திருக்கின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலைகளில் முறைப் பொறியாளர்கள், தரக் கட்டுப்பாட் டுப் பிரிவில் உதவி மேலாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் நேரடி நியமனத்தின் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் உணவு மானிய கோரிக்கைக்கு பதிலளித்துப் பேசும்போது தெரிவித் துள்ளார்.
அச்சத்தில் ஊழியர்கள்
நிறுவனத்திலேயே தகுதியான வர்கள் இருந்தும், அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்காமல் நேரடி நியமனம் செய்யப்படுவது ஊழலுக்கு வழிவகுக்கும் என்கின்ற னர் இங்கு பணியாற்றும் ஊழியர் கள். துறைரீதியான அனைத்து அனுபவங்களையும் பெற்றுள்ள தங்களுக்குப் பதவி உயர்வு வழங்கா விட்டால், அதே நிலையிலேயே ஓய்வு பெறும் நிலை ஏற்படும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக் கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக ஊழியர் சங்க ஏஐடியுசி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
நுகர்பொருள் வாணிபக் கழகத் தில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை தற்காலிக தினக்கூலி ஊழியர்களாக வேலை பார்ப்பவர்களை காலிப் பணியிடங்களின் தகுதியின் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்ற விதிமுறை தொழில் தகராறு சட்டம் 1947 பிரிவு 12 (3)-ல் சொல்லப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையை மீறி, காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தெரி வித்து இருப்பது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. ஏற்கெனவே இந்த நிறுவனத்தில் பதவி உயர்வுக்கு உரிய அனைத்துத் தகுதிகளுடன் இளநிலை தரக்கட்டுப்பாடு அலு வலர்களாகவும், இளநிலை உதவி யாளர்களாகவும் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர் களுக்கு பதவி உயர்வு வழங்கி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஊழலுக்கு வழிவகுக்கும்
சேவை அளிக்கும் ஒரு நிறுவனத்தில் நேரடி நியமனம் என்பது லஞ்சம், ஊழலுக்கு மட்டுமே வழிவகுக்கும் என்பதால், இதனை தமிழக அரசு கைவிட வேண்டும். தகுதியான ஊழியர்களுக்கு உரிய பதவி உயர்வுகளை வழங்கி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT