Published : 27 Jul 2016 08:54 AM
Last Updated : 27 Jul 2016 08:54 AM
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களால் இளைய தலைமுறையினர் தடம் மாறிச் செல்வதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால், சமூக வலைதளங்களை தங்கள் ஊரின் வளர்ச்சிக்காகவும், அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றவும் பயன்படுத்த முடியும் என மெய்ப்பித்துள்ளனர் காயல்பட் டினத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகராட்சிப் பகுதி யில் வசிக்கும் இளைஞர்கள் இணைந்து, ‘நடப்பது என்ன?’ என்ற பெயரில் ‘வாட்ஸ்அப்’ குழு ஒன்றை 31.05.2016-ல் தொடங் கினர். தங்கள் நகரில் நிலவும் மக்கள் பிரச்சினைகள், அடிப்படைத் தேவைகள் குறித்து குழுவில் விவாதித்து, அந்தப் பிரச்சினையை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்று தீர்வு காண வேண்டும் என்பதுதான் இந்தக் குழுவின் நோக்கம்.
குழுவின் தலைமை ஒருங் கிணைப்பாளர் பி.எம்.ஏ.சதக்கத் துல்லா தலைமையில் 10 பேர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக் கப்பட்டுள்ளனர். காயல்பட்டினம் நக ரின் அனைத்து பகுதிகளைச் சேர்ந் தவர்களும், அனைத்துத் தரப்பு மக்களும் குழுவில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உறுப்பினர்கள் இணைக்கப்பட் டுள்ளன. வணிகர்கள், ஜமாத் நிர் வாகிகள், மாணவர்கள், மருத்து வர்கள், பொறியாளர்கள், இல்லத் தரசிகள், ஆசிரியர்கள் என பல தரப்பட்ட மக்களும் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இணைந்தனர்.
2-வது குழு
வாட்ஸ்அப் குழுவில் 256 பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க முடியும். ஆனால், அதை யும் தாண்டி ஏராளமானோர் உறுப் பினர்களாக இணைய விருப்பம் தெரிவித்தனர். இதனால் வாட்ஸ் அப் குழுவுடன், டெலிகிராம்குழு ஒன்றும் தனியாக கடந்த மாதம் ஏற்படுத்தப்பட்டது. இக்குழு வில் 275 பேர் உறுப்பினர் களாக இருக்கின்றனர்.
இக்குழுக்களில் காயல்பட்டினம் நகரின் வளர்ச்சி, அடிப்படைத் தேவைகள், பிரச்சினைகள் குறித்து மட்டுமே கருத்து பரிமாற்றம் இருக்க வேண்டும் என்பது விதிமுறை.
இதுகுறித்து பி.எம்.ஏ.சதக்கத் துல்லா, ‘தி இந்து’விடம் கூறிய தாவது: ‘நடப்பது என்ன?’ வாட்ஸ் அப் குழு சார்பில் முதல் பொரு ளாக பேருந்து பிரச்சினையை விவாதத்துக்கு எடுத்தோம். காயல் பட்டினம் நகரை புறக்கணித்து, நேரடியாக திருச்செந்தூர், தூத்துக் குடிக்கு செல்லும் அரசுப் பேருந்து கள் தொடர்பாக உறுப்பினர்கள் பலரும் புகார் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரை கடந்த ஜூன் 20-ல் சந்தித்து மனு கொடுத்தோம். அடுத்த நாளே பல பேருந்துகள் ஊருக்குள் வந்து சென்றன.
‘காயல்பட்டினம் சீ கஸ்டம்ஸ்’ சாலையை பேவர் பிளாக் சாலையாக மாற்ற நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பேவர் பிளாக் சாலையால் பயனில்லை. தீங்குகள்தான் அதிகம் என வாட்ஸ்அப் குழு சார்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அதன் விளைவாக முதலில் தீர்மானத்தை ஆதரித்த உறுப்பினர்களே பின்னர் எதிர்த் தனர். இதனால் அந்தத் தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர் நடவடிக்கை
காயல்பட்டினத்தில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனை, வாடகை வாகனங்களில் அதிகக் கட்டணம் வசூல் போன்ற பல பிரச் சினைகளை கையில் எடுக்க உள்ளோம். குழுவில் விவாதித்து கருத்து ஒற்றுமை அடிப்படையில் தான் முடிவு எடுக்கப்படும்.
தற்போது குழுவுக்கு தனி லோகோ ஒன்று வடிவமைக்கப்பட் டுள்ளது. மேலும், குழு உறுப்பினர் களுக்கு சீருடை (ஓவர் கோர்ட்) தயாரிக்கப்படுகிறது. இந்த வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழு காயல்பட்டினம் நகரின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT