Published : 26 Mar 2017 10:14 AM
Last Updated : 26 Mar 2017 10:14 AM
ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நலத்திட்டங்கள் என்ன என்பது குறித்து செல்போன் மூலம் விளக்கும் பணிகளை சசிகலா தலைமையிலான அதிமுக (அம்மா) அணியின் ஐடி பிரிவு நேற்று தொடங்கியது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் போட்டியிடும் அதிமுக (அம்மா) அணி வேட்பாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் வீடுதோறும் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் செல்போன் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ள அதிமுக (அம்மா) அணியின் ஐ.டி. பிரிவு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கின.
இதுபற்றி அக்கட்சியின் தென் சென்னை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராயல் ராஜா ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தகவல் தொழில்நுட்பம் வளர்ந் துள்ள நிலையில் செல்போன் என்பது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக் கிய சாதனமாக உள்ளது. எங்கள் ஐடி பிரிவு சார்பில் பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம். இதற் காக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு உரிய பயிற்சிகளை அளித்துள்ளோம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு நிறைவேற்றிய நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை வாக்காளர்களிடம் செல்போன் மூலம் கொண்டு சேர்க்கவுள் ளோம். இதற்காக 4 பூத்களுக்கு ஒரு ஐ.டி பிரிவு நிர்வாகியை நிய மித்துள்ளோம்.
வாய்ஸ் கால்
ஒரு குடும்பத்தில் சாதாரணமாகவே 2 அல்லது 3 பேரிடம் செல்போன் இருக்கிறது. முதல்கட்டமாக வாக் காளர்களிடம் நேரில் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து ஆதரவு கேட்கிறோம். பிறகு, அவர் களிடமிருந்து செல்போன் எண்கள் வாங்கி அதன் மூலம் தமிழக அரசு மேற்கொண்ட நலத்திட்டப் பணிகளையும் ஆர்.கே.நகரில் ஜெய லலிதா மேற்கொண்ட பணிகளையும் செல்போன் மூலம் கொண்டு சேர்க்கவுள்ளோம்.
இதற்காக, நேற்று ஒரே நாளில் சுமார் 500 வாக்காளர்களிடம் செல்போன் எண் பெறப்பட்டுள்ளது. மக்களின் விருப்பத்தை கேட்டுத்தான், நாங்கள் அவர்களிடமிருந்து செல்போன் எண்களை வாங்குகிறோம். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. பெறப்பட்ட செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் அரசின் சாதனைகளை அனுப்பி வருகிறோம். இதுதவிர, வாய்ஸ் கால் மூலம் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கவுள்ளோம். அதிமுகவைச் சேர்ந்த பெரும்பான்மையானோர் எங்கள் அணியில் இருந்தும் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாதது பற்றி மக்களிடம் விளக்கி பிரச்சாரம் மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT