Published : 31 Mar 2014 10:34 AM
Last Updated : 31 Mar 2014 10:34 AM

பாரம்பரியத்துடன் கூடிய உடல் ஆரோக்கியம்: விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அறக்கட்டளை தொடக்கம்

பாரம்பரியத்தை கைவிடாமல் உடல் ஆரோக்கியம் பெறுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பி.எல்.இ.சி. என்கிற அறக்கட்டளை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

துரித உணவு வகைகள், நொறுக் குத் தீனிகள் உள்ளிட்டவைகளா லும், மன அழுத்தத்தாலும் மனிதர் களுக்கு பல்வேறு நோய்கள் வருகின்றன.

அதனைத் தவிர்க்க பாரம்பரியத்துடன் கூடிய உடல் ஆரோக்கியத்தை பெறுவது தொடர்பாக இளைய தலைமுறை யினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ’தி மெடிக்கல் பார்க்’ நிறுவனம் சார்பில், பி.எல்.இ.சி. அறக்கட்டளை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

சென்னை, பெரியார் அறிவியல் நகரத்தில் நடந்த இந்த விழாவில், இங்கிலாந்து நடிகை டென்னிஸ் வெல்ச், இந்திய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய செயலர் வி.கே. சுப்புராஜ், ஆயுர்வேத மருத்துவர் விஸ்வநாத சர்மா, சித்த மருத்துவர் கனகவள்ளி, பி.எல்.இ.சி. அறக்கட்டளை இயக்குநர்களான ஜெயபிரகாஷ், கிருத்திகா ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மிளகுப் பொடி யுடன் கூடிய பொட்டுக்கடலை, தேங்காய் துருவலுடன் கூடிய அவல், எள் உருண்டை, திணை மாவு, மாதுளம் பழம், நெல்லிக் காய் ஜூஸ் ஆகியவை மதிய உண வாக வழங்கப்பட்டது. மேலும் தற்போது பெரும்பாலான வீடுகளில் காணாமல் போய்விட்ட அம்மிக்கல், ஆட்டுக்கல், தண்ணீர் பானைகள் உள்ளிட்டவை அரங்கின் முன்புறத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

பி.எல்.இ.சி. அறக்கட்டளை குறித்து, அதன் இயக்குநர் மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன் தெரிவித்ததாவது:

தற்போதைய உணவு முறைகளாலும், மன அழுத்தத்தாலும், மனிதர்களுக்கு பலவித நோய்கள் வருகின்றன.

எனவே நெருப்பை யும், எண்ணெய் வகைகளையும் பயன்படுத்தாமல் பருப்புகள், தானி யங்கள் மற்றும் பழம், காய்கறி கள் போன்ற இயற்கை உணவு கள் கொண்ட பாரம்பரிய உணவு வகைகளை உட்கொண்டும், யோகா உள்ளிட்ட உடற்பயிற்சி களை மேற்கொண்டும் நோய்கள் இல்லாமல், உடல் ஆரோக்கி யத்தை பேணிக்காக்கலாம்.

இதுகுறித்து இன்றைய இளைய தலைமுறையினருக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தவே பி.எல்.இ.சி. அறக்கட்டளை தொடங்கப்பட் டுள்ளது என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x