Published : 05 Aug 2016 09:17 AM
Last Updated : 05 Aug 2016 09:17 AM
சென்னையில் இருந்து பழநி நோக்கி சென்றுகொண்டிருந்த விரைவு ரயில் நேற்று அதிகாலை ஊத்தங்கரை அருகே தடம் புரண் டது. இதில் ரயிலில் பயணம் செய்த 1,400 பயணிகள் உயிர் தப்பினர். இச்சம்பவம் தொடர்பாக 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9.40 மணியள வில் விரைவு ரயில் (எண்:22651), பழநி நோக்கி புறப்பட்டது. ரயிலில் 3 குளிர்சாதனப் பெட்டிகள், 10 படுக்கை வசதி கொண்ட பெட்டி கள், 6 பொதுப் பெட்டிகள் உட்பட 19 பெட்டிகளில் சுமார் 1,400 பய ணிகள் பயணம் செய்தனர்.
பயங்கர சப்தம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங் கரை வட்டம் கல்லாவி அருகே உள்ள தாசம்பட்டி ரயில் நிலையத் தில் சிக்னல் மாற்றப்பட்டதால் 2 நிமிடங்கள் நின்ற பழனி விரைவு ரயில் மீண்டும் புறப்படத் தொடங் கியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை மிதமான வேகத்தில் கடந்த ரயில், அதிகாலை 1.50 மணிக்கு தடம் புரண்டது. உடன டியாக ரயில் இன்ஜின் ஓட்டுநர் கள் பிரசாத், மிஸ்ரா ஆகியோர் வேகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அதற் குள், ரயில் தண்டவாளத்தை விட்டு சுமார் 30 அடி தூரம் சென்று மண்ணில் சக்கரங்கள் புதைந்து நின்றது.
ரயில் இன்ஜின், முன்பதிவு செய்யப்படாத 2 பெட்டிகள் தடம் புரண்டன. பயங்கர சப்தத்துடன் ரயில் தடம் புரண்டதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரயிலில் பயணம் செய்த 1,400 பயணிக ளும் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர், அவ்வழியே வந்த மற்றொரு விரைவு ரயிலில் 90 சதவீத பயணிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஈரோடு மற்றும் திருப்பூரில் இருந்து வந்த மீட்புக் குழுவினர் தடம் புரண்ட ரயிலில் இணைக்கப் பட்டிருந்த பெட்டிகளை கிரேன் மூலம் அகற்றினர். பின்னர், காலை 6.45 மணியளவில், ஜோலார்பேட் டையில் இருந்து 2 பெட்டிகளு டன் வந்த இன்ஜினுடன் பழனி விரைவு ரயில் இணைக்கப்பட்டு புறப்பட்டுச் சென்றது.
அதிகாரிகள் ஆய்வு
தகவலறிந்து தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹிரி, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ரயில் நிலையத்தில் இருந்து முதல் பிளாட்பாரத்தில் வந்த ரயில், நிலை யத்தை விட்டு வெளியே வந்ததும் டிராக் மாற்றி சேலம் பாதையில் சென்றிருக்க வேண்டும் என்பதும், ஆனால் ட்ராக் மாற்றும் தொழில் நுட்பத்தில் கோளாறு ஏற்பட்ட தால் தடம் புரண்டிருக்க வாய்ப்பு இருக்கும் என்கிற கோணத்திலும் ஆய்வு மேற்கொண்டனர். தாசம் பட்டி ரயில் நிலைய அலுவலர் உமேஷ்பிரசாத், ரயில் இன்ஜின் ஓட்டுநர்கள், கார்டு லெனின் கு மார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங் கர் வர்மா, ‘தி இந்து’விடம் கூறும் போது, ‘‘நிலைய அலுவலரின் கவனக் குறைவால், தவறான தக வல்கள் ஓட்டுநருக்கு அளித்ததன் காரணமாக ரயில் தடம் புரண்டுள் ளது. தாசம்பட்டி ரயில் நிலைய அலுவலர் (பொறுப்பு) உமேஷ் பிரசாத், நிலைய அலுவலர் நிதிஷ் குமார் மிஸ்ரா, போக்குவரத்து ஆய்வாளர் சஞ்சய் பிரசாத், பணி யாளர் செந்தில்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளனர்’’ என்றார்.
அருகே 40 அடி ஆழத்தில் ஏரி
ரயில் தடம் புரண்ட இடத்துக்கு வெகுஅருகே 40 அடி ஆழம் கொண்ட தாசம்பட்டி ஏரி உள்ளது. தடம் புரண்ட நிலையில் ரயில் இன்னும் சிறிது தூரம் சென்றிருந்தால், அதிக அளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும். சக்கரங்கள் மண்ணில் இறங்கி நின்றதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால், பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னை - பழநி ரயில் தடம் புரண்டதால், அவ்வழியே செல்லும் ரயில்கள் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. மேலும், தடம் புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்ததால், அவ்வழியே வரும் அனைத்து ரயில்களும் மிதமான வேகத்தில் இயக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT