Last Updated : 12 Feb, 2017 09:05 AM

 

Published : 12 Feb 2017 09:05 AM
Last Updated : 12 Feb 2017 09:05 AM

தமிழக ஆளுநருடன் டிஜிபி, காவல் ஆணையர்கள் சந்திப்பின் பின்னணி தகவல்கள்

டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையரை நேரில் வரவழைத்து ஆலோசனை நடத்தியதின் பின்னணி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார்.

அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். தமிழக முதல்வராக வசதியாக ஓ.பன்னீர் செல்வம் தனது பதவி விலகல் கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். எந்நேரமும் ஆட்சி அமைக்க சசிகலாவை ஆளுநர் அழைக்கலாம் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில், கடந்த செவ்வாய் இரவு யாரும் எதிர்பாராத வகை யில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதி ரான கருத்துகளை வெளியிட்டார்.

பதிலுக்கு சசிகலா தரப்பினரும் ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றம் சாட்டினர். முதல்வரின் கட்டுப்பாட் டில் காவல்துறை இருந்தாலும், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா என இரு அதிகார மையங்களின் கீழ் காவல்துறை செயல்படுவதாக நேர்மையான காவல்துறை அதி காரிகள் தங்களுக்குள் வருத்தங் களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில், தமிழக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகி யோரை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் தனது இல்லத்துக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.

நேற்று முன்தினம் மாலை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இருவரும் ஆட்சி அமைக்க ஆளு நரிடம் தனித்தனியாக உரிமை கோரி னர். இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டுத் தரும்படி சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனுக் களும் தாக்கல் செய்யப்பட்டன. இது போலீஸாருக்கு புது தலைவலியை ஏற்படுத்தியது.

இந்நிலையில்தான் டிஜிபி டி.கே ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், நுண்ணறிவு பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தாமரைக் கண்ணன் ஆகியோரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று நேரில் அழைத்து சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இதுபற்றி கூடுதல் டிஜிபி அந்தஸ் தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: தமிழக காவல்துறை உள்துறை செயலாளர் கட்டுப்பாட் டில் இயங்கும். உள்துறை செயலா ளரை முதல்வர் இயக்குவார். ஆனால், தற்போது அந்த நிலை இல்லை. தொடர்ந்து நடைபெறும் காவல் துறை பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மேலும், அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் சிறை வைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளி யாகி உள்ளன. இதுபோன்ற நிலை யில்தான் டிஜிபி-யையும், காவல் ஆணையரையும் அழைத்து ஆளு நர் விவரங்களை கேட்டுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர் கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தீவிரமாக ஆராய்ந்து உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டம், ஒழுங்கு நிலை சரியில்லை என்றால் எந்நேரமும் தனது கட்டுப்பாட்டில் காவல்துறையை கொண்டு வர ஆளுநர் தயங்கமாட்டார் என்றனர்.

இதேபோல் தமது பணிகளை விடுத்து அரசியல் விவகாரங் களில் தலையிட்டு வரும் போலீஸ் அதிகாரிகள் பற்றி ஆளுநர் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. அதன் அடிப் படையில் ஒரு சில போலீஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x