Published : 10 Feb 2014 12:00 AM
Last Updated : 10 Feb 2014 12:00 AM
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் திங்கள்கிழமை தொடங்கியது. முதல்நாளில் மட்டுமே 300 பேரிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேர்காணல் நடத்தி யுள்ளார். வேட்பாளர்களிடம் கூட்டணி வைக்கலாமா? தனித்து போட்டியிடலாமா? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
வருகிற நாடாளுமன்ற தேர்த லில் கூட்டணி அமைப்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்னும் முடிவு செய்ய வில்லை. இந்த நிலையில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இதையடுத்து, மனு கொடுத்த வர்களிடம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத் தில் தேமுதிக தலைவர் விஜய காந்த் திங்கள்கிழமை நேர்காணல் நடத்தினார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 300 பேரிடம் நேர்காணல் நடந்தது.
முதல் நாளில் (திங்கள்கிழமை) தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம் (தனி), நாகப்பட்டினம் (தனி), கடலூர், விழுப்புரம் (தனி), கள்ளக்
குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 10 தொகுதிகளைச் சேர்ந்த விண்ணப்ப தாரர்கள் அழைக்கப்பட்டு இருந் தனர். மொத்தம் 300 பேர் வந்திருந்தனர். நேர்காணலுக்கு கல்விச் சான்றிதழ், கட்சி உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் வந்து இருந்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரே நேரத்தில் 5 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.
அந்தந்த தொகுதி நிலவரம் குறித்து அவர்களிடம் விஜயகாந்த் கேட்டறிந்தார். மேலும் கூட்டணி அமைத்து போட்டியிட லாமா? அல்லது தனித்துப் போட்டி யிடலாமா? உள்ளிட்ட கேள்விகளை கேட்டார். இந்த நேர்காணலின் போது விஜயகாந்துடன் தலைமை நிலைய செயலாளர் ப.பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இந்த நேர்காணல் நிகழ்ச்சி 12–ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT