Published : 06 Jun 2016 02:28 PM
Last Updated : 06 Jun 2016 02:28 PM
சேலத்துடன் இணைந்துள்ள 5 நான்கு வழிச்சாலைகளில் 5 ஆண்டுகளில் நடந்த 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட விபத்துகளில் 1,929 பேர் பலியாகியுள்ள பரிதாபம் நடந்துள்ளது. சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கன்னியாகுமரி-காசி (என்.எச்.7), சேலம்-கொச்சி (என்.எச்-47), சேலம்- உளுந்தூர் பேட்டை (என்.எச்.68) ஆகிய 3 தேசிய நெடுஞ் சாலைகள் சேலம் வழியாக செல்கின்றன. இந்த மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டன.
இவற்றில், ஓமலூர்- கிருஷ்ணகிரி, ஓமலூர் - நாமக்கல், சேலம்- குமாரபாளையம், குமார பாளையம்- செங்கப்பள்ளி, சேலம்-உளுந்தூர்பேட்டை ஆகியவை சுங்கக் கட்டண சாலைகளாக மாற்றப்பட்டன. நான்கு வழிச்சாலை என்பதால் இச்சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்தது டன், வாகனங்களின் வேகமும் சராசரியாக மணிக்கு 80 கிமீ., ஆக உயர்ந்தது.
ஆனால், இன்று பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான வாகனங்கள் அதிகபட்சம் மணிக்கு 140 கிமீ., வேகத்தில் செல்லக் கூடியவை என்பதால், 4 வழிச்சாலை களில் இயக்கப்படும் பெரும் பாலான வாகனங்களின் சராசரி வேகம் மணிக்கு 100 கி.மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்துவிட்டது.வாக னங்களின் எண்ணிக்கையும் வேக மும் கணிசமாக உயர்ந்துவிட்ட தால், 4 வழிச்சாலையோரங்களில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலை விபத்துகளில் சிக்குவதும், அதில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் ஓமலூர்- கிருஷ்ணகிரி (86 கி.மீ.,) சுங்கச் சாலையில் நடந்த 2,833 விபத்துக்களில் 338 பேரும், ஓமலூர்-நாமக்கல் (68 கி.மீ.,) சாலையில் 1,787 விபத்துக்களில் 620 பேரும், சேலம்-குமாரபாளையம் (52 கி.மீ.,) இடையிலான சாலையில் 1,478 விபத்துக்களில் 205 பேரும், குமாரபாளையம்-செங்கப்பள்ளி (42 கி.மீ.,) சாலையில் 1,684 விபத்துக்களில் 154 பேரும், சேலம்- உளுந்தூர்பேட்டை (136 கி.மீ.,) சாலையில் 2,819 விபத்துக்களில் 612 பேரும் பலியாகியுள்ளனர். 5 சுங்கச் சாலையிலும் கடந்த 5 ஆண்டுகளில் 10,601 விபத்துக்களில் 1,929 பேர் பலியாகியுள்ளனர்.
அதிவேக சாலை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தாதது, மக்கள் குறுக்கிடும் இடங்களில் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது, சுங்கச்சாலை நிர்வாகத்தினர், போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போலீஸார் போதுமான அளவில் ரோந்து சென்று சாலையோர மக்களையும், அதிவேக வாகனங் களையும் எச்சரித்து, கண்காணிக் காதது ஆகியவை யும் மிக முக்கிய காரணங் களாகும். இது போன்ற குறைபாடு களை களையாவிடில், எதிர்காலத்தில் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதுடன், விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக் கையும் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மக்களின் நலன்கருதி ஒருங்கிணைந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT