Published : 28 Jan 2017 11:36 AM
Last Updated : 28 Jan 2017 11:36 AM

ரூ.200 கோடியில் தூர்வாரப்படும் வைகை அணை: ஆய்வு முடிந்ததால் விரைவில் பணிகள் தொடங்குவதாக தகவல்

வைகை அணையை ரூ. 200 கோடியில் தூர்வாரும் திட்டத்து க்கான ஆய்வுப் பணிகள் நிறை வடைந்துள்ளதால் விரைவில் தூர்வாரும் பணி தொடங்கப்பட உள்ளதாக மதுரை பெரியாறு வைகை வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மதுரை, திண்டுக்கல், சிவக ங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயத் தேவைக்கான நீரையும், ஆண்டிபட்டி, மற்றும் மதுரைக்கு தேவையான குடிநீரையும் வைகை அணை வழங்கி வரு கிறது. கடந்த ஒரு ஆண்டாக பெரியாறு, வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை முற்றிலும் ஏமாற்றியதால் தற்போது வைகை அணையின் நீர்மட்டம், 25 அடியாக குறைந்துள்ளது. இதில் 5 அடி மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், மீதி 20 அடிக்கு சேறும், சகதியும் படிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது வைகை அணையில் இருக்கும் தண்ணீர், மதுரை மாநகராட்சியின் 2 வார கால குடிநீர் தேவைக்கு மட்டும் போதுமானதாக இருக்கிறது.

வைகை அணையை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்காததால் அணை நீர் கொள்ளளவு குறைந் துவிட்டது. அதனால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதனால், அணையில் நிரம்பியி ருக்கும் சகதியை அகற்றி, தூர் வாரி அணையின் நீர் கொள் ளளவை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்து வருகின்றனர். தற்போது மழையில்லாததால் விவசாயப் பணிகளும் நடக்காமல் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். அதனால், வைகை அணையை தூர்வார சரியான நேரம் கிடைத்துள்ளதாகவும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வைகை அணையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

அரசு தற்போதும் தூர்வாரா விட்டால் போராட்டங்களில் ஈடுபட போவதாக தேனி, மதுரை மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை பெரியாறு வைகை வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் எம். மொக்கமாயன் கூறியதாவது: வைகை அணையை தூர்வாரும் திட்டத்துக்காக டெண்டர் விடப்பட்டு வாக்கோஸ் நிறுவனத்துக்கு வழங் கப்பட்டுள்ளது. அந்நிறுவனம், வைகை அணையை தூர்வார ஆய்வுப்பணியை முடித்து, தற்போது அரசுக்கு அறிக்கை வழங்கி உள்ளது. தற்போது இந்த திட்டம் அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

அணை 10 கி.மீ. சுற்றளவில் இருப்பதால், தூர் வார சுமார் ரூ.200 கோடி வரை செலவாக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே இந்த திட்டம் அரசின் பரிசீலனையில் இருப்பதால், அதை ரத்து செய்துவிட்டு உடனடியாக விவசா யிகளிடம் தூர்வார கொடு க்க முடியாது.

ஆய்வு அறிக்கை வழங்கப்பட்டு விட்டதால் விரைவில் தூர் வாரப்படும் என்றார்.

‘நாங்களே தூர்வாருகிறோம்’

கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி கூறியதாவது: மதுரை மாநகராட்சி குடிநீர் ஆதாரத்தை தனியாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். மாநகராட்சியில் ஒதுக்கப்படும் குடிநீர் ஆதாரத் திட்ட நிதி குடிநீர் குழாய் பதிப்பதற்கே செலவிடப்படுகிறது. அணையில் 20 அடிக்கு மேல் தேங்கிய சகதியை அகற்ற வேண்டும். 3 ஆண்டுகளாக அணை தூர்வாரப்படாதே பாதி வறட்சிக்கு காரணம். இப்போது தூர்வாரா விட்டால் எப்போதும் தூர்வார மாட்டார்கள். அரசால் தூர்வார முடியாவிட்டால் எங்களிடம் கொடுங்கள். நாங்கள் தூர் வாருகிறோம். அணையில் சேகரமாகும் மண் வளமான மண். அதனால், அணையில் அள்ளும் மண்ணை நாங்கள் உரத்திற்கு பயன்படுத்திக் கொள்வோம். பிப். 25-க்குள் தூர்வார வேண்டும், அதற்குள் தூர்வாராவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x