Published : 09 Jan 2017 12:04 PM
Last Updated : 09 Jan 2017 12:04 PM
கேரளாவில் உள்ள தோட்டங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் இயந்திரங்களைக் கொண்டு தேயிலை பறிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் கேரள தோட்ட வேலையை தமிழக தொழிலாளர்கள் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டங்களில் தேனி, நெல்லை, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இருந்து பல தொழி லாளர்கள் தினமும் ஜீப்களில் சென்றும் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு வாரம்தோறும் கூலி வழங்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில், தேயிலையை பறிக்க தற்போது இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தமிழக தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. இது குறித்து ‘தி இந்து’விடம் தேனி மாவட்ட தோட்ட தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது:
கேரள தேயிலை தோட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த நிரந்தரமான மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். இதனால் தோட்ட நிர்வாகம் அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது. அங்கு வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் வழிக் கல்வி கற்க நடுநிலை, உயர்நிலை பள்ளிகளை கேரள அரசு கட்டிக் கொடுத்துள்ளது.
இதற்கிடையில் தொழிலாளர் களுக்கு வாரம்தோறும் கூலியாக 500, 1000 ரூபாய் நோட்டுகளாக தோட்ட நிர்வாகம் வழங்கி வந்தது. இந்த ரூபாய்களின் பண மதிப்பு நீக்கப்பட்டதால் புதிய ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவே கிடைத்தன. இதனால் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறை கூலி தருவதாக சில தோட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வாரம்தோறும் கூலி கிடைக்காததால் வறுமையில் வாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தேயிலை தோட்ட வேலைக்குச் செல்லாமல் ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்பினர். தேயிலையை பறிக்க ஒரு மாதத்திற்கும் மேலாக கூலி ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது.
தற்போது பணத் தட்டுப்பாடு நீங்கி வருவதால் பலர் மீண்டும் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லத் தொடங்கி யுள்ளனர். ஆனால் தோட்ட நிர்வாகிகள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் ஒடிசா, பிஹார், அசாம் ஆகிய வடமாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அழைத்து வந்து இயந்திரங்களைக் கொண்டு தேயிலை பறிக்கத் தொடங்கியுள் ளனர்.
இதனால் பல தலைமுறைகளாக தேயிலை தோட்ட வேலையை நம்பி வசிக்கும் தமிழக தொழி லாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ கத்திலும் போதிய மழையின்றி வறட்சி நிலவுவதால், நிரந்தரமாக எந்த வேலையும் கிடைக்காமல் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அத னால் தேயிலை தோட்ட தொழி லாளர்களின் வாழ்வா தாரத்திற்கு தமிழகம், கேரள மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT