Published : 26 Jan 2017 08:45 AM
Last Updated : 26 Jan 2017 08:45 AM
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வார்தா புயலில் சேதமடைந்த மரங்கள் ரூ. 32.15 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.
தமிழகத்தில் சமீபத்தில் வீசிய வார்தா புயலின்போது, வண்ட லூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த ஆயிரக் கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. இந்த பூங்காவை முதல்வர் பன்னீர் செல்வம் ஆய்வு செய்து சீரமைப்பு பணிக்கு முதல் கட்டமாக ரூ.2 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனிடையே பூங்காவை ஆய்வு செய்த மத்திய குழுவிடம் ரூ.24 கோடி சீரமைப்பு பணிக்கு தேவை என வனத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த பூங்கா, வார்தா புயலின் தாக்கத்தால் தற்போது மூடப் பட்டுள்ளது.
இந்நிலையில் வார்தா புயலில் சேதமடைந்த மரங்கள் ரூ. 32 லட்சத்து 15 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுத்த வர்களிடம் 10 நாட்களில் மரங் களை அப்புறப்படுத்த வேண்டும் என பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தி யுள்ளது.
இது குறித்து பூங்கா அதி காரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறும் போது, “வார்தா புயலால் சேதமடைந்த பூங்காவை சீரமைக் கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியும் நடக்கிறது.
இதில் விழுந்த மரங்களில் நல்ல நிலையில் உள்ள தைல மரங்கள் தமிழ்நாடு காகித நிறுவனத்துக்கு வழங்கப் பட்டன. மீதி மரங்கள் ஏலத்தில் விடப்பட்டன. 10 நாட்களுக்குள் அவற்றை விரைந்து அப்புறப் படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மரங்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின் பூங்காவைத் திறக்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT