Published : 08 Aug 2016 10:07 AM
Last Updated : 08 Aug 2016 10:07 AM

சபரிமலையில் இன்று நிறை புத்தரிசி பூஜை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று மாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று இரவு 10 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, அண்மையில் ஆடி மாதத்தின் முதல் 5 நாட்கள் கோயில் நடை திறக்கப் பட்டிருந்தது.

அதன் பிறகு, நிறை புத்தரிசி பூஜைக் காக தற்போது மீண்டும் கோயில் திறக்கப் பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.45 மணியிலிருந்து, 6.15-க்குள் நடை பெறும் நிறை புத்தரிசி பூஜைக்கு தந்திரி கண்டரர் மகேஷ்வரர், மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

இப்பூஜையை முன்னிட்டு நேற்று காலை அச்சன்கோயிலில் இருந்து நெற்கதிர்கள் ஊர்வலமாக சபரிமலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டு, மாலை யில் பம்பை வந்தடைந்தது. பின்னர், அங்கிருந்து சன்னிதானத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டில் இருந்தும் நெற்பயிர்கள் கொண்டு வரப்பட்டன.

அச்சன்கோயிலில் இருந்து நிறை புத்தரிசி பூஜைக்கு நெற்கதிர்கள் கொண்டு வரப்படுவது இதுவே முதல்முறை என கேரள அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்கு பூஜை செய்யப்படும் நெற்கதிர்கள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த நெற்கதிர்களை பூஜையறையில் கட்டி வைத்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x