Last Updated : 26 Feb, 2017 10:05 AM

 

Published : 26 Feb 2017 10:05 AM
Last Updated : 26 Feb 2017 10:05 AM

சசிகலா - ஓபிஎஸ் அணிகள் மோதலால் நெருக்கடி: உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை இருக்குமா?

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள் கட்சி பிரச்சினையால் உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை இலை சின்னம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராகவும், அக் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பினர் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளை முன்வைத்தார். இதை யடுத்து, அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. நாங்கள்தான் உண்மை யான அதிமுக என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி வருகிறார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை மே 14-ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு மாநில தேர் தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி யளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘உள் ளாட்சித் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்’ என தெரிவித்துள்ளார். இரட்டை இலையை கைப்பற்ற தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் தரப்பினர் அணுகுவார்கள் என்று தெரிகிறது.

வரலாறு திரும்புகிறது

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெ. அணி, ஜா. அணி என அதிமுக-வில் பிளவு ஏற்பட்டதால் இரட்டை இலை சின்னம் முடக்கப் பட்டது. ஜானகி அணிக்கு இரட் டைப் புறா சின்னமும் ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது. அதேபோன்ற சூழல் இப்போதும் ஏற்பட்டுள்ளது.

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கருத்து

இதுகுறித்து முன்னாள் தலை மைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

இதுபோன்ற சூழலில் யார் கட்டுப்பாட்டில் பெரும்பான்மை யான கட்சி உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய் வதற்கு சில வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்த விதிமுறைகளைப் பின்பற்றி கட்சிச் சின்னத்தை எந்த தரப்புக்கு அளிப்பது என்பது குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவிடும்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகி னால், அவர்கள் மனு குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் மற்றொரு தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பும். பின்னர், இருதரப்பு விளக்கத்தையும் கேட்டு முடிவெடுக்க சில காலம் ஆகும். உடனடியாக இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்காது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக கட்சியின் சின்னத்தை யாருக்கு வழங்குவது என தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காவிட்டால் சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளது. அதன்பிறகு இரு தரப்புக்கும் தற்காலிகமாக வேறு சின்னங் களை தேர்தல் ஆணையம் ஒதுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சின்னம் ஒதுக்கும் விஷயத்தில் எம்.பி., எம்எல்ஏக்களின் எண் ணிக்கை முக்கிய பங்காற்றுமா என கேட்டபோது, ‘‘அதுவும் ஒரு முக்கிய அம்சம்தான். ஆனால், அந்த எண்ணிக்கையை வைத்து மட்டுமே தேர்தல் ஆணையம் முடிவெடுக்காது. கட்சியின் கூட்டம் முறையாக கூட்டப்பட்டுள்ளதா, அதில் யாரெல்லாம் பங்கேற்றார் கள் என்பது உள்ளிட்ட பல் வேறு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும்’’ என்றார்.

என்.கோபால்சாமி கருத்து

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி கூறும்போது ‘‘இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப் பட்டால், கட்சி, ஆட்சி இந்த இரண்டிலும் யாருக்கு பெரும்பான்மையான ஆதரவு உள்ளது என தேர்தல் ஆணையம் ஆராயும். கட்சி விதிகளின்படி பதவி பெற்று, அதில் அதிக ஆதரவு யாருக்கு உள்ளதோ அவர்களுக்கே சின்னம் கிடைக் கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x