Published : 22 Jan 2017 11:33 AM
Last Updated : 22 Jan 2017 11:33 AM
தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தால், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜன.22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக் கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தா லும், மற்றொருபுறம் அலங்கா நல்லூரில் அந்த ஊர் மக்களும், போராட்டக்காரர்களும் அவசர சட்டம் தேவையில்லை. நிரந்தர சட்டம் வேண்டும் என வலியுறுத்தி, தொடர்ந்து 6-வது நாளாக நேற்று அடைமழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற் பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் நடத் திய தொடர் போராட்டத்தால் ஏற் பட்ட அழுத்தத்தால் தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் நிறைவேற்றியது. இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டு மென முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், மக்கள் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து அவசர சட்டம் தேவை யில்லை, நிரந்தர சட்டம் வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இந்நிலையில், அலங்காநல்லூ ரில் நேற்று 6-வது நாளாக அடை மழையிலும் அலை அலையாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட னர். வழக்கம்போல அதிகாலை யிலேயே போராட்டத்தை தொடங் கிய உள்ளூர் மக்கள், போராட்டக் காரர்கள் 6 மணி முதல் 10 மணி வரை வாயில் கருப்புத் துணிகளை கட்டிக் கொண்டு மவுனப் போராட் டத்தை நடத்தினர். அவர்களில் ஒரு குழுவினர், நேற்று காலை முதல் இரவு வரை ஜல்லிக்கட்டுக் காக ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இளைஞர்கள், பெண்கள், சிறு குழந்தைகள் பலர், காந்தி, காளை போல பல்வேறு வேடங்கள் அணிந்திருந்தனர். அதி காலை முதல் மாலை வரை அவ் வப்போது மழை பெய்துகொண் டிருந்தது. ஆனாலும், போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. ஊர் மக்கள், வீடு களில் இருந்த தார்ப் பாய்களை எடுத்து வந்து குழந்தைகள், பெண்கள் இருந்த பகுதியில் மட்டும் தற்காலிகப் பந்தல்கள் அமைத்துக் கொடுத்தனர்.
இந்நிலையில், நேற்று அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு காட்சிப் படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்பட்டு, இன்று 22-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அவனியாபுரத்தில் 25-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள் ளது. பாலமேட்டில் தேதி இன் னும் முடிவாகவில்லை. இதைத் தொடர்ந்து மதுரையில் அமைச்சர் கள் செல்லூர் கே. ராஜு, ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆட்சி யர் கொ. வீரராகவராவ், வருவாய், சுகாதாரம், கால்நடைத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஒருபுறம் செய்து வந்தாலும் அதற்கு உள்ளூர் மக்கள் தயாராவதாகத் தெரிய வில்லை. முதல்வரின் கோரிக் கையை ஏற்க மறுத்து ஒருபுறம் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள், மறு புறம் மக்கள் போராட்டத்தால் அலங்காநல்லூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வாடிவாசலை இளைஞர்கள் முற்றுகை
அங்காநல்லூர் வாடிவாசலில் நேற்று மாலை பேரிகார்டுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் கால்நடைத் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் போலீஸார் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு திரண்ட 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வாடிவாசல் பகுதியில் புகுந்து நிரந்தர சட்டம் நிறைவேற்றாமல் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம் என கோஷமிட்டபடி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், அவர்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். அங்கு திரண்ட பொதுமக்கள், அந்த இளைஞர்கள், முதல்வரே வந்து ஜல்லிக்கட்டை நடத்தினாலும், நிரந்தர சட்டம் நிறைவேற்றாமல் ஜல்லிக்கட்டை பார்க்க வர மாட்டோம் என்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT