Published : 14 Mar 2014 04:52 PM
Last Updated : 14 Mar 2014 04:52 PM

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தலா 9 தொகுதிகளில் போட்டி- காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுகவுக்கு ஆதரவு இல்லை

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தலா 9 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. மற்ற தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக கட்சிகளுக்கு ஆதரவு இல்லை என்றும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை அதிமுகவுடன் இணைந்து சந்திக்க இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முடிவு செய்தன. அந்தக் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் சென்னை வந்து, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர். பின்னர் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், 40 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. அத்துடன் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கினார். இது கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அதிமுக அணியில் இருந்து விலகுவதாக அறிவித்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக தெரிவித்தன. இதுகுறித்து இரு கட்சிகளின் நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தி வந்தனர்.

18 தொகுதிகளில் போட்டி

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இருவரும் சென்னையில் வெள்ளிக்

கிழமை நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறிய

தாவது:

தமிழகம் மற்றும் புதுவையில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து தலா 9 தொகுதிகள் என மொத்தம் 18 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி (தனி), நாகப்பட்டினம் (தனி), புதுச்சேரி, திருப்பூர், சிவகங்கை, தருமபுரி, கடலூர், திருவள்ளூர் (தனி), தூத்துக்குடி ஆகிய 9 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை, கன்னியாகுமரி, வடசென்னை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், விழுப்புரம் (தனி), தஞ்சாவூர் ஆகிய 9 தொகுதிகளிலும் போட்டியிடும்.

வேட்பாளர் பட்டியல்

இரு கட்சிகளும் போட்டியிடாத 22 தொகுதிகளில் பாஜக, திமுக, காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளோம். வேறு எந்தக் கட்சிகளுக்கு ஆதரவு என்பது இன்னும் 10 நாளில் அறிவிக்கப்படும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் 16-ம் தேதியும் (நாளை), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் 17-ம் தேதியும் (திங்கள்கிழமை) வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து தா.பாண்டியன் கூறியதாவது:

நாங்கள் தனித்துப் போட்டியிட

வில்லை. மக்களின் ஆதரவோடு போட்டியிடுகிறோம். சுயேச்சை வேட்பாளர்கள் அல்லது வேறு கட்சிகள் எங்களை அணுகினால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது பற்றி பரிசீலிப்போம்.

தமிழகத்தில் மற்ற கட்சிகளின் கூட்டணி அமைக்கும் முயற்சி இன்னும் வெற்றி பெறவில்லை. ஆனால் நாங்கள் இரண்டே நாள் கூடிப் பேசி முடிவெடுத்துள்ளோம். இதுதான் எங்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்.

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x