Published : 20 Feb 2014 12:37 PM
Last Updated : 20 Feb 2014 12:37 PM

அதிமுகவில் இணைந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் முறைப்படி இணைந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர முக்கிய காரணியாக இருந்தவர் அக்கட்சியின் அவைத் தலைவராக இருந்தவரான பண்ருட்டி ராமச்சந்திரன்.

தேர்தல் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது.

அதைத் தொடர்ந்து, விஜயகாந்தின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்து வந்த பண்ருட்டி ராமச்சந்திரன், சமீபத்தில் தேமுதிகவில் இருந்து விலகினார். எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். அப்போது, உடல்நிலை காரணமாக அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.

அந்தச் சூழலில், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசு சார்பில் அண்ணா விருதை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, அதிமுகவும், அதன் பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் ஆதரவாக பண்ருட்டி ராமச்சந்திரன் பேசி வந்தார்.

இந்த நிலையில், பண்ருட்டி ராமசந்திரன் இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் அதிமுகவில் முறைப்படி தன்னை இணைத்துக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x