Published : 08 Dec 2014 09:59 AM
Last Updated : 08 Dec 2014 09:59 AM

ஆதார் அட்டை விண்ணப்பங்களுக்காக அலைக்கழிப்பு: பொதுமக்கள் புகார்

ஆதார் அட்டைக்கான விண்ணப்பங்கள் எந்தெந்த வார்டுகளுக்கு எந்தெந்த அலுவலகங்களில் வழங்கப்படும் என்ற விவரத்தை மாநகராட்சி முறையாக அறிவிக்காததால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். மேலும், ஆதார் அட்டைக்கான விணணப்பங்கள் அனைவருக்கும் கிடைப்பதில்லை என்ற புகார்களும் வந்துள்ளன.

சென்னை மாநகராட்சியில் 50 இடங்களில் ஆதார் அட்டைக்கான நிரந்தர மையங்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் 15 மண்டல அலுவலகங்களிலும், 35 மாநகராட்சி பகுதி அலுவலகங்களிலும் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்ய விண்ணப்பங்கள் கொடுக்கப்படும். ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கு புகைப்படங்கள் எடுக்கப்படும். ஆனால் இந்த மையங்களுக்கு வரும் பொது மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் புகார்

ஆதார் அட்டைக்காக விண்ணப் பித்து கடந்த ஏழு மாதங்களாக காத்திருக்கும் கோபால் இது குறித்து தெரிவிக்கும் போது, “நான் மண்டல அலுவலகத்தில் தான் எனது விண்ணப்பத்தை அளித்தேன். ஆனால், இப்போது புகைப்படம் எடுக்க வேறு இடத்துக்கு போகச் சொல்கிறார் கள்” என்றார்.

இது குறித்து கோடம்பாக்கம் மண்டலத்திலுள்ள மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “சிலிண்ட ருக்கான மானியத்தை பெற ஜனவரி மாதம் முதல் ஆதார் அட்டை அவ சியம் என்று மத்திய அரசு கூறியிருப்பதால், இதுவரை ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்காதவர்களும், பல மாதங்களுக்கு முன் விண்ணப்பித்து அட்டை கிடைக்காதவர்களும் தற்போது மாநகராட்சி அலுவலகங்களில் காத்து கிடக்கின்றனர். ஆனால், ஆதார் மையத்தில் இரண்டு நபர்கள் மட்டுமே இருப்பதால், அனைவருக்கும் ஒரே நாளில் பதில் சொல்ல முடியவில்லை.

எந்தெந்த அலுவலகங்களில் ஆதார் அட்டை கிடைக்கும் என்பது மண்டல அலுவலகங்களில் தெரிவிக்கப்படுகிறது” என்றார்.

டோக்கன் முறை

ஆதார் மையங்களில் கூட்டத்தை சமாளிக்க டோக்கன்கள் அளித்து நாளொன்றுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே புகைப்படங்கள் எடுக்கும்படி செய்திருப்பதாக அடையார் மண்டல மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x