Published : 28 May 2017 10:35 AM
Last Updated : 28 May 2017 10:35 AM
சட்டப்பேரவையில் ஜெயலலிதா வின் உருவப்படத்தை திறந்து வைத்தால்தான் அந்த மன்றத்துக்கே பெருமை கிடைக்கும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள் ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 42-வது கோடை விழா மலர் கண் காட்சியை தமிழக முதல்வர் பழனி சாமி நேற்று தொடங்கிவைத்தார். வேளாண்துறை அமைச்சர் துரைக் கண்ணு தலைமை வகித்தார். விழாவில் முதல்வர் பேசியதாவது:
திருக்குறளில் கூறப்பட்ட அரச னுக்கு உரிய அனைத்து பண்பு களையும்கொண்டு ஆட்சி செய்த வர் ஜெயலலிதா. 6 முறை முதலமைச் சராக இருந்து, இந்தியாவின் முதலமைச்சர்களுக்கெல்லாம் சூப்பர் முதலமைச்சராக இருந்தவர். அவர் மீது வேண்டுமென்று பழி கூறி ஆதாயம் தேடியவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர். நீதிமன்றமே தீர்ப்பு கூறிவிட்டது, அதற்கு மேல் வேறு என்ன வேண்டும்?
சட்டப்பேரவையில் ஜெயலலி தாவின் உருவப்படத்தை திறந்து வைத்தால்தான் அந்த மன்றத்துக்கே பெருமை கிடைக்கும்.
தலைவராக இருப்பவருக்கு பொறுமையும் அடக்கமும் தேவை. சிந்திக்காமல் எதையும் கர்வத்துடன் பேசிவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
சிக்கல் இல்லை
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை கரூரில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: அதிமுக பொதுக்குழு கூடி மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சேர்ந்துதான் பொதுச் செயலாள ராக சசிகலாவைத் தேர்வு செய்தோம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எனது நண்பர் தான்.
அதிமுகவின் 2 அணிகளும் இணைவதில் எந்தச் சிக்கலும் இல்லை. எங்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவ தற்கு 2 தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனை வரும் ஒன்றுபட்டு எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண் டாடுவோம்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை கட்சித் தலைமை முடிவெடுக்கும். தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்றார்.
கருத்து தெரிவிக்க முதல்வர் மறுப்பு
ஏற்காட்டில் நிருபர்களிடம் நேற்று முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
இறைச்சிக்காக மாடு விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ள செய்தி பத்திரிகைகளில் வந்துள்ளது. அது குறித்து மத்திய அரசின் ஆணை வந்தபின்னர்தான் கருத்து தெரிவிக்க முடியும்.
அதிமுக வளர்ச்சி குறித்து ஆலோசிக்கவே அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இணைப்பு குறித்து அதிமுகவின் இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுள்ளோம். இரு அணிகளும் நிச்சயமாக இணையும். அமைச்சரவையில் மாற்றம் என்பதெல்லாம் உண்மையல்ல.
அதிமுகவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமைச்சர் பதவி கேட்டதாக வந்த செய்தி தவறானது. இந்த ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர், உயர்ந்தவர், ஜாதி, மதம் என்ற பேதம் கிடையாது. அனைவரும் சமமாகவே இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT