Published : 17 Apr 2017 08:21 AM
Last Updated : 17 Apr 2017 08:21 AM

புதிய மின்சார ரயில் பெட்டிகளில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்க நவீன தொழில்நுட்பம்: ஐசிஎப் தலைமை பொறியாளர் தகவல்

புதிதாக தயாரிக்கப்படும் மின்சார ரயில் பெட்டிகளில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்க நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப் படும் என்று பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையின் தலைமை மின்னியல் (எலக் ட்ரிகல்) பொறியாளர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ரயில் பயணிகளின் பாதுகாப் புக்கான அம்சங்களை மேம்படுத் தும் வகையில் பல்வேறு வசதி களை மேற்கொண்டு வருகிறோம். ஏற்கெனவே பல்வேறு ரயில்களின் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ஆய்வு நடத்தினோம். அந்த கேமராக் களின் செயல்பாடுகள் திருப்தி கரமாக இருப்பதால், புதியதாக தயாரிக்கப்படும் மின்சார ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேம ராக்களை பொருத்தவுள்ளோம்.

அதேபோல, மின்சார ரயில் பெட்டிகளில் இருந்து ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்க நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்தப்படுத்த உள்ளோம். இதற்காக ரயில் பெட்டிகளில் சிறப்பு பொத்தான் அமைக்கப் படும். ஓடும் ரயிலில் தீ விபத்து, திருட்டு போன்ற அசம்பாவிதங்கள் நடந்தாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ பயணிகள் இந்த பொத்தானை அழுத்தலாம். இதன் மூலம் ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஓட்டுநரை தொடர்புகொள்ள முடியாத சூழல் இருக்கும்போது மற்ற பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் செல்லும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களை மேம்படுத்த ஒவ்வொரு மின்சார ரயிலுக்கும் கூடுதலாக ரூ.40 லட்சம் செலவிடப்படவுள்ளது. புதிதாக தயாரிக்கவுள்ள 50 மின்சார ரயில் பெட்டிகளில் இந்த புதிய வசதி கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக ரோந்து பணி யில் ஈடுபட்டு வரும் ரயில்வே போலீஸார் தரப்பில் கூறுவதாவது:

சென்னையில் சென்ட்ரல், கடற்கரை, எழும்பூர் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில்வே போலீஸ் சார்பில் எழும்பூர், மாம்பலம், குரோம்பேட்டை, மறைமலைநகர், செங்கல்பட்டு என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 70 பேர் முதல் 90 பேர் வரையில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என பல்வேறு பதவிகளில் இருக்க வேண்டும்.

ஆனால், தற்போது ஒவ்வொரு பிரிவிலும் 40 பேர் மட்டுமே உள்ளனர். மின்சார ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், பாதுகாப்பு பணிகளை மேம்படுத்த போதிய ஆட்கள் நியமிக்கப்படவில்லை. எனவே காலியாகவுள்ள சுமார் 300 பணியிடங்களை நிரப்பினால் பாதுகாப்பை பலப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x