Published : 03 Feb 2014 12:00 AM
Last Updated : 03 Feb 2014 12:00 AM
வெடிகுண்டு விவகாரம் தொடர்பாக 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை அமைச்சருக்கு, பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் பைப் வெடி குண்டு கண்டறியப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு தனது வீட்டில் ஞாயிற்றுக் கிழமை மாலை செய்தியாளர்களை மத்திய இணையமைச்சர் நாராயணசாமி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:நான் வீட்டில் இருப்பதாகக் கருதிதான் பைப் வெடிகுண்டு வைத்துள்ளனர். பைப் குண்டுகளைத் தென் மாநிலங்களிலேயே பார்த்ததில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய புலனாய்வுத்துறை (என்ஐஏ) பல கோணங்களில் விசாரணை நடத்துகிறது.
பிரதமர் என்னை வரவழைத்து பேசினார். வெடிகுண்டு விவகாரம் தொடர்பாக 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும், இதைக் கண்டறியவும் மத்திய உள்துறை அமைச்சருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
எனக்கும், எனது குடும்பத்துக் கும் பாதுகாப்பு அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு சிலர் எனது வீட்டில் கிடைத்தது குண்டு இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியினர் இக்குண்டை வைத்து விட்டு நாடகமாடுகின்றனர் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. எந்த அரசியல்வாதியும் கேவலமான நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள்.
எனக்கு பாதுகாப்பு அதிகப்படுத் தியுள்ளது தர்மசங்கடமாக உள்ளது. எவ்வித முன்னறிவிப்பின்றி எளிதாக மக்களை சந்திக்கும் எனக்கு இது இக்கட்டான சூழல்.
கேஜ்ரிவால் ஆதாரமில்லாத ஊழல் குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர் வாசன் உட்பட சிலர் மீது கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
இலங்கை, இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தையி்ல் முடிவு ஏற்படும் சூழலில் மீண்டும் இலங்கை அரசு மீனவர்களைக் கைது செய்துள்ளது. இது பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும். இலங்கை அரசு மீனவர்களைக் கைது செய்வதை நிறுத்த வேண்டும்.
தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சி பலமான கூட்டணியை அமைக்கும். தற்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கட்சிகளுடன் பேசி வருகிறார்கள். தேர்தல் அறிவித்தபிறகு சரியான நேரத்தில் கூட்டணி தமிழகத்தில் அமையும். சோனியா இதை உறுதி செய்வார் என்று தெரிவித்தார்.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்று கேட்டதற்கு,
"எனக்கு தெரியாது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT