Published : 09 Mar 2014 12:05 PM
Last Updated : 09 Mar 2014 12:05 PM

ஜெயலலிதா பிரதமராக வருவது காலத்தின் கட்டாயம்: மதுரை ஆதீனம் பிரத்யேகப் பேட்டி

“தமிழக முதல்வர் அம்மா, இந்தியப் பிரதமராக வருவது காலத்தின் கட்டாயம்; யார் தடுத்தாலும் அது நடந்தே தீரும்’’ என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்த மதுரை ஆதீனம், ’’அம்மா பிரதமராக வருவதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்தார் ஆதீனம்.

இந்நிலையில் நேற்று ‘தி இந்து’வுக்கு மதுரை ஆதீனம் அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியதாவது: ‘’ நாட்டை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கும் சாதுர்யம், சாமர்த்தியம், துணிவு இவை அனைத்தும் அம்மாவிடம் இருக்கிறது.

இந்தத் தேர்தலில் பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் தான் பெருமளவில் வெற்றிபெறப் போகின்றன. அப்படியொரு சூழல் வரும்போது அம்மா பிரதமராக வருவதை யாராலும் தடுக்க முடியாது; அது காலத்தின் கட்டாயம். தென் இந்தியர்களை பிரதமராக வரவிட மாட்டார்கள் என்பதெல்லாம் மாயை.

அம்மாவை வடக்கும் வரவேற்கும். அதன் தொடக்கம்தான் மம்தா பானர்ஜியும் அம்மாவும் தொலைபேசியில் உரையாடி இருப்பது. அம்மா பிரதமரானால் முல்லைப் பெரியாறு, காவிரி, ஈழம், கச்சத்தீவு இத்தனை பிரச்சினைகளுக்கும் விடிவு பிறக்கும்

இப்படிப் பேசுவதால் ஆதீனம் அரசியல் பேசுவதாக எண்ணிவிடக் கூடாது. சமயமும் ஆதீனங்களும் மக்களுக்காகத்தான். அந்த அடிப் படையில் இந்திய திரு நாட்டுக்கு திறமையும் அறிவும் சார்ந்த ஒரு பிரதமர் கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் முடிவுக்கு வந்தோம்.

அம்மா அவர்களிடம் எங்களது முடிவைச் சொன்ன துமே மனப்பூர்வமாக ஏற்றுக்கொண் டவர், அருகிலிருந்த அமைச்சர் பன்னீர்செல்வத்தை அழைத்து பிரச்சாரத்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் படி அறிவுறுத்தினார். எங்களது சமயப்பணிகளுக்கு நடுவே, நாற்பது தொகுதிகளிலும் சுமார் ஒரு மாத காலம் பிரச்சாரம் செய்யலாம் என தீர்மானித்திருக்கிறோம்’’ இவ்வாறு தெரிவித்தார் ஆதீனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x