Published : 06 Mar 2017 09:30 AM
Last Updated : 06 Mar 2017 09:30 AM

உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள் மீது 2 ஆண்டுகளில் 840 புகார்கள்: உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் தகவல்

உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 840 புகார் மனுக்கள் பெறப்பட்டு, அதில் சுமார் 600 மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேயர்கள் உள்ளிட்ட உள்ளாட் சிப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள் மீதான முறைகேடு புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த 2014-ல், ‘உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்’ ஏற்படுத்தப் பட்டது. 2015 ஏப்ரலில் இருந்து முறைப்படி செயல்படத் தொடங்கிய இந்த அமைப்புக்கு இதுவரை 840 புகார்கள் வரப்பெற்று, அதில் சுமார் 600 புகார்களுக்கு உரிய நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்த நடுவத்தின் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

முறைகேடு புகார்கள் மாத்திர மின்றி உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் தங்களின் பொறுப்பை வேண்டுமென்றே தட்டிக் கழித்திருப்பதாக வந்த புகார்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வசூலித்த சொத்து வரியை உள்ளாட்சியில் செலுத்தாத வரித்தண்டலர்கள், கையூட்டு கொடுக்காததால் அதிக மாக சொத்துவரி கணக்கிட்ட வரித்தண்டலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.50 கோடி இடம் ஆக்கிரமிப்பு காயல்பட்டினம் நகராட்சியின் பெண் நகராட்சி தலைவரைச் செயல்படவிடாமல் முடக்கிவிட்டு ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவதாக புகார் வந்தது. நடுவத்தின் விசாரணையில் அது உண்மை என தெரியவந்ததால் நகராட்சி ஆணையர், பொறியாளர் உள்ளிட்ட அத்தனை உயர் அதிகாரிகளும் கூண்டோடு அங்கிருந்து மாற்றப்பட்டனர்.

சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் உள்ள இராயலா நகரில் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட பூங்கா, சமூதாயக்கூடங் களுக்கான இடங்களைத் தனியார் ஆக்கிரமித்திருந்தார்கள். இந்த புகாரை விசாரித்து சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான இடங்களை மீட்டு மாநகராட்சியிடம் நடுவம் ஒப்படைத்தது.

சில இடங்களில் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாக வந்த புகார்களை விசாரித்து சாலைகளைப் போடவைத்திருக்கிறோம்.

பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு தாமதமின்றிப் பணப் பட்டுவாடா செய்ய வைத்தது, உள்ளாட்சி அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றியது உள்ளிட்ட பல தீர்வுகளைக் கண்டி ருக்கும் நடுவம், உள்ளாட்சிகளுக்கு வருவாய் மற்றும் நிதியிழப்பை ஏற்படுத்தியதற்காக மொடக்குறிச்சி பேரூராட்சி நிர்வாக அலுவலருக்கு 35 லட்ச ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சியில் மூன்று அலுவலர் களுக்கு 12.5 லட்ச ரூபாயும் ரொக்க வரி போட்டிருக்கிறது. அதேசயம், தவறான புகாரைத் தெரிவித்த சிலர் எச்சரிக்கப்பட்டு அவர்களிடம் வழக்கு செலவு தொகையாக 5000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.10-க்கான நீதிமன்ற வில்லை உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் நடுவர் சோலை.அய்யரிடம் இதுபற்றி கேட்டபோது, “உள்ளாட்சி நிர்வாகம், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அலுவலர்கள் சம்பந்தப்பட்ட எந்தப் புகாராக இருந்தாலும் எங்களுக்கு தெரிவிக்கலாம். இதற்காக நடுவத் தின் இணையத்தில் (www.tnlbo.tn.gov.in) உள்ள (படிவம் 1) படிவத்தைப் பூர்த்திசெய்து, அத்

துடன் 10 ரூபாய்க்கான நீதிமன்ற வில்லையுடன் புகாரையும் இணைத்து சென்னையில் கத விலக்கம் 100, அண்ணாசாலை - கிண்டி என்ற முகவரில் (மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகம் அருகில்) செயல்படும் எங்கள் அலுவலகத்தில் நேரிலோ தபாலிலோ அளிக்கலாம்.

12 புகார்கள் விசாரணையில்...

ஆவணங்கள், சாட்சிகள் இருந்தால் அவற்றையும் இணைக்கலாம். புகார்கள் மீது உரிமையியல் நீதிமன்ற விதிகளின்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 12 உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீதான புகார்கள் தற்போது நடுவத்தின் விசாரணையில் உள்ளன.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரவிருப்பதால், இந்த நடுவத்தைப் பயன்படுத்திக்கொள்வது குறித்து பொதுமக்களுக்கும் நடுவம் எப்படி

யெல்லாம் நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்து அடுத்துவரும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த பகுதி வாரியாக தனித்தனியாக பயிற்சிப் பட்டறைகளை நடத்தத் தீர்மானித்திருக்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x