Published : 27 Jan 2017 08:45 AM
Last Updated : 27 Jan 2017 08:45 AM
சமூக வலைதளங்களில் பரப்பப் பட்ட சென்னை கலவரம் தொடர் பான வீடியோ பதிவால் காவல்துறை மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை, அதே சமூக வலைதளத்தை பயன்படுத்தி முறியடிக்கும் முயற்சிகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் ஒரு வாரமாக போராட்டம் நடத்தினர். சென்னை மெரினாவில் போராட்டத்தைத் தொடர்ந்தவர்களை வெளியேற்ற போலீஸார் முயன்றபோது வன்முறை வெடித்தது.
இந்நிலையில், சென்னையில் கலவரம் நடைபெற்ற பகுதியில் ஆட்டோவை போலீஸாரே தீ வைத்து எரிப்பதும், சாலையோர குடிசைக்கு பெண் போலீஸ் தீ வைப்பதும், தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங் களை போலீஸார் தடியால் அடித்து உடைப்பதும், பெண்களை தடி யால் அடித்து விரட்டுவதும், தண் ணீர் குடங்களை பிடுங்கி ரோட்டில் போட்டு உடைப்பதுமான வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து வன்முறையில் ஈடுபட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஒரு வாரம் போராட்டம் நடத்திய இளைஞர் களை அரண்போல் பாதுகாத்த போலீஸார் மீது களங்கம் சுமத்து வது நியாயமா? ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய இளைஞர்களை உற்சாகப்படுத்திய போலீஸாரை திட்டலாமா? என்பது போன்ற கேள்விகள் வாட்ஸ்அப், முகநூல் வழியாக போலீஸார் தரப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
அதில், ‘இளைஞனே உங்க ளோடு காத்துக்கிடந்தோம், உங் களை காத்துக்கிடந்தோம்’ என ஆரம்பித்து, ‘உன்னை எரித்து குளிர் காய நினைத்தவர்களிடம் இருந்து உன்னை காத்தவர்கள் இப்போது காயங்களுடன், கண்ணீருடன்...’ என காவலர் ஒருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். அதேபோன்று சென்னை கலவரத்தில் காய மடைந்த போலீஸ்காரர் ஒருவர் மருத்துவமனையில் இருந்தபடியே இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோவும் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த காவலர் ஒருவர் கூறும் போது, “சென்னை கலவரம் மாண வர்கள் கூட்டத்தில் ஊடுருவிய சிலரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. மாணவர்களின் போராட்டத்துக்கு போலீஸார் ஆதரவாக இருந்தனர். மாணவர்கள் போர்வையில் கூட் டத்தில் புகுந்த பல்வேறு அமைப் பினர் ஜல்லிக்கட்டு கோரிக்கை நிறைவேறியபோதும் மாணவர் களை கலையவிடாமல் தடுத்து வந்தனர். இதை கண்டுபிடித்து அவர்களை வெளியேற்ற முயன்ற போது போலீஸார் மீது தாக்கு தல் நடத்தப்பட்டது. ஆனால் திட்ட மிட்டு போலீஸார் மீது களங்கம் சுமத்தப்படுகிறது. சமூக வலை தளங்கள் மூலம் போலீஸாருக்கு ஏற்படுத்தப்பட்ட களங்கத்தை அதே சமூக வலைதளங்கள் மூலம் நீக்க முயன்று வருகிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT