Published : 18 Jul 2016 11:16 AM
Last Updated : 18 Jul 2016 11:16 AM
தமிழகத்தில் தற்போது ஆடி பட்டம் ஆரம்பித்துள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளை நம்பியே, தமிழகத்தின் குடிநீர் மற்றும் வேளாண் பாசனம் ஆகியவை உள்ளன.
கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் நேற்று வரை கேரளத்தில் பெய் திருக்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இயல்பைக் காட்டி லும் 20 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. தமிழகத்திலும் தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. கோவை மாவட்டத்தில் மட்டும் இயல்பைக் காட்டிலும் 229 சதவீதம் அதிக மழையும், திருவள்ளூர், தேனி, திருநெல்வேலி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சற்று கூடுதலா கவும் பெய்துள்ளது. மற்ற மாவட் டங்களில் கடந்த 2 மாதங்களில் பெய்ய வேண்டிய மழையளவு 29 சதவீதம் குறைந்ததால், ஆடிப்பட்ட சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
அதனால், இப்பருவத்தில் பயிரிடப்படும் நிலப்பரப்பின் அளவு வெகுவாகக் குறைந்தும், வேளாண் விளைபொருட்களின் உற்பத்தி பெருமளவு குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வடகிழக்கு, தென் மேற்கு பருவமழை முறையாகப் பெய்யாததால், பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது. குடி நீ ருக்காகவும், பாசனத்துக்காகவும் விவசாயிகளும், பொதுமக்க ளும் புதிய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளை அமைப் பது அதிகரித்துள்ளது.
சொட்டுநீர் பாசனம்
இதுகுறித்து வேளாண்மை பொறியாளர் பிரிட்டோ ராஜ் கூறியதாவ து: வறட்சி நேரமான தற்போது ஆழ்துளை கிணறுகள் அமைக்கக் கூடாது. விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, தங்களிடம் எவ்வளவு நிலம் இருந் தாலும் தற்போது கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீர் அளவைப் பொருத்து மட்டுமே சாகுபடி பரப்பை நிர் ணயிக்க வேண்டும்.
தண்ணீர் தேவை குறைவாக உள்ள பயிர்களைத் தேர்ந்தெடுத் து, உயரிய தொழில்நுட்பத்துடன் குறைந்த பரப்பில் அதிக லாபம் ஈட்டும் வழிமுறைகளைக் கடை பிடிக்கலாம். உற்பத்திச் செலவு அதிகமாக காரணமான வேதியியல் உரங்களைக் கைவிட்டு, குறைந் தளவு நீரையும், அதிக சாகுபடிக்கு வழிவகை செய்யும் இயற்கை உரங்களையும் பயன்படுத்தலாம்.
வெப்ப சலனம் காரணமாக எதிர்பாராத மழை, ஒவ்வொரு பகுதியிலும் விட்டுவிட்டு பெய்வதால் அதனை சேமிக்க நிலங்களில் மண் கரை அமைத்தல், பண்ணைக்குட்டை மற்றும் குழி எடுத்து வரப்பு அமைத்தல் போன்ற மண்வளப் பாதுகாப்பு பணிகளை செய்து, மேல் மண்ணில் ஈரப்பதத்தை அதிகரிக்கலாம்.
சொட்டுநீர் பாசனம் மற்றும் இதர நுண்ணுயிர் பாசனங்களை அதிகளவில் முறைப்படுத்தி, நெல் முதற்கொண்டு அனைத்து பயிர் களுக்கும் இருக்கும் நீரை பகிர்ந்து கொடுக்கலாம். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உடைந்த தடுப்பணைகள் மற்றும் குளங்களின் கரைகளை செப்பனிடலாம். இவ்வாறு செய்வது இப்பட்டத் துக்கு மட்டுமில்லாது எதிர்வ ரும் மழைக் காலங்களில் நீரை பூமிக்குள் செலுத்தவும் ஏதுவாக அமையும் என்று அவர் கூறினார்.
ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை
பிரிட்டோ ராஜ் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கிணறுகளும், 6.75 லட்சம் ஆழ்துளை கிணறுகளும் உள்ளன. தற்போது ஏரி, குளங்கள் உள்ளிட்ட 75 சதவீத நீர் ஆதாரங்கள் வறண்டதால் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளுக்கு தண்ணீர் வழங்கும் நிலத்தடியில் இருக்கும் நீர் தாங்கிகளில் தண்ணீர் இல்லை. அதனால், கிணறுகளை ஆழப்படுத்தினாலும், புதிய கிணறு, ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை.
தற்போது ஒரு ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.1 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை செலவாகிறது. கிணறு தோண்ட ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. நிலத்தடி நீரை ஆய்வு செய்ய ஆய்வாளர்களுக்கு சுமார் ரூ.1000 முதல் ரூ.12 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியுள்ளது. இந்தச் செலவு அனைத்தும் தற்போது வீண் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT