Last Updated : 22 Jun, 2017 02:29 PM

 

Published : 22 Jun 2017 02:29 PM
Last Updated : 22 Jun 2017 02:29 PM

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு மாநில அரசே காரணம்: மத்திய அரசு பதில் மனு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு மாநில அரசே காரணம் என மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு உத்திரவிடக்கோரி பாஸ்கர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக 2015- 2016 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக ஒரே இடத்தில் 200 ஏக்கர், போக்குவரத்து வசதியுள்ள 3, 4 இடங்களை தேர்வு செய்து தகவல் தெரிவிக்க தமிழக அரசுக்கு மத்திய நிதி அமைச்சகம் அப்போதே தெரிவித்தது.

ஆனால் தமிழக அரசிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை" தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு மாநில அரசே காரணம் என மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளதையடுத்து விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x