Published : 10 Mar 2017 08:49 AM
Last Updated : 10 Mar 2017 08:49 AM
ஜிபிஎஸ் மற்றும் தமிழக மீனவர் களுக்கு அரசு வழங்கியுள்ள ஆபத்து கால சமிக்ஞை கருவி களில், கடல் எல்லை தொடர்பாக எச்சரிக்கும் அம்சங்கள் இடம்பெற வில்லை என்று மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின் றனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப் படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதைத் தடுக்கு மாறு தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்கிறது.
நவீன தொழில்நுட்ப காலத் தில், தான் இருக்கும் இடத்தை துல்லியமாக காட்டும் ஜிபிஎஸ் கருவிகளை மீனவர்கள் பயன் படுத்தி வரும் நிலையில், தமிழக அரசு மீனவர்களுக்கு வழங்கியுள்ள ஆபத்துகால சமிக்ஞை கருவி களை வைத்திருக்கும் வேளையில், கடல் எல்லையை கணிக்க முடி யாதா? என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் எழுகிறது.
இது தொடர்பாக மீன்வளத் துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ஜிபிஎஸ் கருவி களும், தமிழக அரசு வழங்கியுள்ள ஆபத்து கால சமிக்ஞை கருவி களும், மீனவர் இருக்கும் இடத் தைத்தான் காட்டும். இலங்கை கடற்பரப்புக்கு சென்றால், எச்ச ரிக்கை விடுக்கும் அம்சங்கள் எதுவும் அந்த கருவிகளில் இல்லை” என்றார்.
மற்றொரு மீன் வளத்துறை அதிகாரி கூறியதாவது:
ஜிபிஎஸ் கருவியைக் கொண்டு நாம் இருக்கும் இடத்தை அறியலாம். ஒரு இடத்தில் மீன் அதிகமாக கிடைப்பது தெரியவந்தால், அந்த இடத்தை ஜிபிஎஸ் கருவியில் அடையாளமிட்டு, சேமித்துக்கொள்ளலாம். அடுத்த முறை அதே இடத்துக்கு செல்ல அந்த கருவி வழிகாட்டும். இந்த கருவிகளின் விலை ரூ.5 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது.
அரசு வழங்கியுள்ள ஆபத்துக் கால சமிக்ஞை கருவியில், உடல் நலக்குறை, தீப்பிடித்தல் உள்ளிட்ட 5 வகையான ஆபத்துகளை குறிக் கும் வகையில் 5 பொத்தான்கள் இடம்பெற்றுள்ளன. ஆபத்துக்கு ஏற்றவாறு பொத்தானை அழுத் தினால், அந்த தகவல் செயற்கைக் கோள் வழியாக சென்னையில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங் கிணைப்பு மையத்துக்கு வரும். அதில், மீனவரின் பெயர், முகவரி, எந்த துறைமுக கட்டுப்பாட்டில் இருந்து புறப்பட்டார், எந்த இடத்திலிருந்து தகவலை கொடுத் தார் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும். அதைக்கொண்டு எளிதாக மீட்பு பணியை மேற்கொள்ள முடியும்.
இந்த கருவிகளில் இருந்து எல்லை தொடர்பான எச்சரிக்கை சமிக்ஞைகள் எதுவும் வராது. நாங்கள் வழங்கிய 1600 கருவிகளிலும், வழங்க உள்ள 4 ஆயிரம் கருவிகளிலும் எல்லை வரையறை தொடர்பான சமிக்ஞை வழங்கும் அம்சங்கள் எதுவும் இடம்பெறாது.
இந்தக் கருவியில் எல்லையை வரையறுத்தால் பிரச்சினை தீர்ந்துவிடாது. ராமேஸ்வரம் மீனவர்கள் வேறு எங்கும் சென்று மீன் பிடிக்க முடியாது. கடல் அமைப்பு அவ்வாறு உள்ளது. அவர்கள் வேறு தொழிலும் செய்ய முடியாது. அதனால் சீனா-ஜப்பான், ஆஸ்திரேலியா-இந்தோனேஷியா ஆகிய நாடுகளிடையே உள்ள இணக்கமான மீன்பிடி முறை போல, குறிப்பிட்ட சில தினங்களுக்கு இலங்கை மீனவர்களும், குறிப் பிட்ட சில தினங்களுக்கு தமிழக மீனவர்களும் இணக்கமாக மீன் பிடிக்கும் முறையை கொண்டுவரு வதுதான் தீர்வாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT