Published : 29 Jun 2017 10:35 AM
Last Updated : 29 Jun 2017 10:35 AM
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப் படும் பெண்களுக்கு, அனைத்து வகையான பரிசோதனைகள், சிகிச்சைகள் அளித்து, விசாரணை கள் மேற்கொள்ளும் வகையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதல் முறை யாக தொடங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மையம், மருத்துவ மனையில் இருப்பது போன்று அல் லாமல், வீட்டில் இருப்பது போன்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட் டுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் சம்பவங்களை தடுக்க பல்வேறு சட்டங்கள் இருந்தாலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டாலும், சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப் படுகின்றனர். மருத்துவமனைக்கு இவர்கள் வரும்போது, பல் வேறு சிகிச்சைகள், சோதனை களுக்காக அங்கும் இங்கும் அனுப் பப்படுவதால், ஏற்கெனவே மன தளவில் பாதிக்கப்பட்ட அவர்கள் மேலும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
மேலும், மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் விசாரிக்கும் போது, தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து மற்ற நோயாளிகள் முன்னிலையில் தெரி விக்க வேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், சம்பவம் தொடர்பான உண்மை களை முழுமையாக கூறாமல் மறைக்கும் சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன.
ஒரே இடத்தில் அனைத்தும்
இப்பிரச்சினையைப் போக்கும் வகையில் பாலியல் பலாத் காரத்தால் பாதிக்கப்படும் சிறுமி கள் மற்றும் பெண்களுக்கு தனியாக ஒரே இடத்தில் அனைத்து பரி சோதனைகள், சிகிச்சைகள், விசா ரணைகள் மேற்கொள்ளும் வகையி லான சிறப்பு மையம் (One Stop Crisis Centre) தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் ஒருங் கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை உள்நோயாளிகள் பகுதியில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் எம்.கோட்னீஸ் நேற்று திறந்து வைத்தார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பி.சாந்தகுமார் தலைமை வகித்தார். உதவி முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலர்கள் இன்சுவை, ஜெயபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறை தலைவர் ஏ.மங்கள கீதா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
வீட்டு வரவேற்பறை
மருத்துவமனையில் இருப்பது போல் அல்லாமல், வீட்டில் சகஜமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த மையத்தில் 2 அறைகள் உள்ளன.
முதல் அறை வீட்டின் வரவேற்பு அறை போன்று ஷோபா, இருக்கை கள், டீபாய், எல்இடி தொலைக் காட்சி போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மற்றோரு அறை மருத்துவ உபகரணங் களுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதலாவது மையம்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை முதல்வர் பி.சாந்தகுமார் கூறும்போது, ``பாலியல் பலாத் காரத்துக்கு ஆளாகும் பெண்கள் ஏற்கெனவே உடல் ரீதியாக வும், மனரீதியாகவும் பாதிக்கப் பட்டிருப்பார்கள். அவர்களை அலைக்கழித்து, மன உளைச் சலுக்கு ஆளாக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தான் இந்த மையம் முதன் முதலாக தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது.
கவுன்சிலிங் அளிக்கப்படும்
மேலும், காவல் துறையினரும் இங்கே விபரங்களை, வாக்கு மூலங்களை சகஜமாக அமர்ந்து அவர்களிடம் பேசி கேட்டு பெற வசதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப் படும் பெண்களுக்கு மருத்துவர்கள் இங்கே வந்து சிகிச்சை அளிப் பார்கள். சட்ட ரீதியான தடய அறிவியல் சோதனைக்கு தேவை யான மாதிரிகளும், அந்த பெண் களிடம் இருந்து இங்கேயே சேக ரிக்கப்படும். மேலும், அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரத்தால் பாதிக் கப்பட்ட பெண்கள் வாரத்துக்கு சராசரியாக 2 முதல் 4 பேர் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த மையம் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.
முன்னோடி மையம்
மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அஸ்வின் கோட்னீஸ் கூறும் போது, ``ஒரு காலத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண்களிடம் ஆண் போலீஸ் அதி காரிகள் தான் விசாரணை நடத்து வர். அப்போது பாதிக்கப்பட்ட பெண் களுக்கு பல கஷ்டங்கள் இருந்தன. தற்போது, பெண் போலீஸ் அதிகாரிகளே விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் அடுத்த கட்டம்தான் இந்த சிறப்பு மையம். முன்னோடி திட்டமான இதுபோன்ற மையங்கள் தமிழகம் முழுவதும் வரவேண்டும்” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT