Published : 25 Feb 2014 12:00 AM
Last Updated : 25 Feb 2014 12:00 AM

நகரும் ரேஷன் கடைகள், வெளிமாவட்டங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வர குளிர்பதன வாகனங்கள்- முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை மாநகரில் ரூ.28 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் 2 நகரும் நியாய விலைக் கடைகள், நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளுக்கு 2 குளிர்பதன வசதியுள்ள வாகனங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு காய்கறிகளை கொண்டு வர குளிர்பதன வாகனங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது:-

வணிக வங்கிகளுக்கு இணையாக, கூட்டுறவு வங்கிகளின் சேவையை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க ரூ.4 கோடியே 37 லட்சத்து 26 ஆயிரத்தில் நவீனமயமாக்கப்பட்ட, மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளின் 15 புதிய கிளைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் விளைபொருட்களை உடனுக்குடன் துல்லியமாக எடைபோட, ஈரோடு மாவட்டம், பெருந்துறை, பவானி, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஆகிய 3 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் 60 மெட்ரிக் டன் கொள்ளளவில் ரூ.57 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கணினி எடை மேடைகள், கோவை மாவட்டத்தில் ரூ.1 கோடியில் 10 இடங்களில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளுக்கு 2 குளிர்பதன வசதியுள்ள வாகனங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து காய்கறிகளை சென்னைக்கு கொண்டு வர ஜி.பி.எஸ். மற்றும் குளிர்பதன வசதியுடன்கூடிய வாகனங்கள் என ரூ.1.05 கோடியில் 5 குளிர்பதன வசதியுள்ள வாகனங்கள், சென்னை மாநகரில் ரூ.28.46 லட்சத்தில் 2 நகரும் நியாய விலைக் கடைகள்,

கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தும் பொருட்டு, கூட்டுறவு வங்கிகளின் 783 கிளைகளில் ரூ.8.80 கோடியில் மைய வங்கியியல் கணினி சேவை வசதி, தனியார் சிறப்பங்காடிகளின் தரத்துக்கு இணையாக, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகளின் சிறப்பங்காடிகள் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில், கோவை சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் தலைமையகத்தில் ரூ.34.50 லட்சத்தில் நவீனப்படுத்தப்பட்ட சுயசேவைப் பிரிவு உள்பட மொத்தத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் ரூ.153 கோடியே 45 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் காணொலிக்காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x