Last Updated : 11 Jul, 2016 09:51 AM

 

Published : 11 Jul 2016 09:51 AM
Last Updated : 11 Jul 2016 09:51 AM

கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது

கூடங்குளம் அணு மின் நிலைய 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நேற்று இரவு 8.56 மணிக்கு தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக் கப்பட்டுள்ளன. இதில், முதல் அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப் பட்டு, மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு வருகிறது. 2-வது அணு உலையிலும் மின் உற்பத்தி தொடங்குவதற்கான தொழில்நுட்ப அனுமதியை கடந்த மாதம் 27-ம் தேதி இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் அளித்தது.

ஆனால், புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் 17 பரிந்துரை களையும், மேலும் 15 அம்ச வழிகாட்டு நெறிமுறைகளையும் செயல்படுத்துமாறு ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கடந்த 2013 மே 6-ம் தேதி உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, மின் உற்பத்தி தொடங்கும் முன், அணு உலை யின் பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் விளைவுகள், பயன்படுத் தப்படும் உதிரி பாகங்களின் தரம் குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், இந்திய அணுசக்தி கழகம் ஆகியவற்றின் அதிகாரிகள் ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக அதிகாரிகள் கடந்த மாத இறுதியில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கு வதற்கு ஏதுவாக அணுப்பிளவு தொடர்வினை மேற்கொள்ள கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.52-க்கு ஏற்பாடுகள் தொடங்கின. இதிலி ருந்து 48 மணி நேரத்தில் கிரிட்டி காலிட்டி எனப்படும் அணுப்பிளவு தொடர்வினையும், தொடர்ந்து மின் உற்பத்தியும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று இரவு 2-வது அணு உலையில் அணுப்பிளவு தொடர்வினை தொடங்கியது. இதையடுத்து அணுமின் நிலைய அதிகாரிகள், ரஷ்ய நிபுணர்கள், ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

2-வது அணு உலையில் அணுப் பிளவு தொடர்வினை தொடங்கி யதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்திய அணுசக்தி கழக தலைவர் எஸ்.கே.சர்மா, கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் உள் ளிட்ட உயர் அதிகாரிகள் கண் காணித்தனர். அணுப்பிளவு தொடர் வினை தொடங்கியதைத் தொடர்ந்து மின் உற்பத்தியும் தொடங்கியது.

தமிழகத்துக்கு 462.50 மெ.வாட்

‘மின் உற்பத்தி படிப்படியாக உயர்த்தப்பட்டு 45 நாட்களுக்குள் 400 மெகாவாட்டை அடையும். அப்போது மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்படும். தொடர்ந்து மின் உற்பத்தி 500 மெகாவாட், 750 மெகாவாட், 900 மெகாவாட், 1,000 மெகாவாட் என, படிப்படியாக அதிகரிக்கப்படும்’ என, அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

2-வது அணு உலை 1,000 மெகாவாட் மின் உற்பத்தியை அடை யும்போது, அதில் இருந்து 462.50 மெகாவாட் மின்சாரம் தமிழகத் துக்கு கிடைக்கும் முதல் அணு உலையில் இருந்து தமிழகத் துக்கு 562.50 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x