Published : 21 Feb 2014 12:00 AM
Last Updated : 21 Feb 2014 12:00 AM

வருவாய்த் துறையில் தொடரும் இடமாற்றங்களைக் கண்டித்து தர்ணா

மக்களவைத் தேர்தலை காரணம்காட்டி வருவாய்த்துறை அலுவலர்களை இடமாற்றம் செய்வதைக் கண்டித்து பிப்ரவரி 25-ம் தேதி மாநிலம் தழுவிய தர்ணா நடக்கிறது.

தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, உள்ளூரில் 3 ஆண்டுகள் பணியாற்றிய அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். உள்ளூரில் அதிக நாட்கள் பணியாற்றும் இவர்களை, அங்கேயே தேர்தல் பணியில் ஈடுபடுத்தினால், முறை கேடுக்கு உடந்தையாக இருக்க வாய்ப்புள்ளது என்ற காரணத்தை சொல்லி, இப்படி இடமாறுதல் செய்வதற்கு பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முந்தைய காலங்களில் ஒருசில முறைகேடுகள் நடந்து இருக்கலாம். ஆனால், தற்போது வாக்காளர்கள் விழிப் புணர்வு அடைந்துள்ளனர். ஓட்டுச்சாவடிகள் வெப் காமரா கொண்டு கண்காணிக்கப் படுகிறது. இவையெல்லாம் இல்லாத காலத்தில், கடைப் பிடிக்கப்பட்ட நடைமுறையை இப்போதும் கடைப்பிடிப்பது நியாயமில்லை என்பது இவர்களின் குற்றச்சாட்டு.

அதேபோல், நேரடியாக தேர்தல் பணிகளில் ஈடுபடு பவர்களை இடமாற்றம் செய்யும் நடைமுறையையும் மாற்றி, தேர்தல் பணிக்கு தொடர்பு இல்லாதவர்களையும் இடமாற்றம் செய்வதால் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரக வளர்ச்சித் துறையில், வட்டார வளர்ச்சி அலுவலரில் தொடங்கி, உதவியாளர் வரை சம்பந்தமில்லாமல் பணி இடமாற்றம் செய்யப் பட்டுள்ளதாக துறை அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கிராமங் களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்ளும் இவர்களை இடமாற்றம் செய்வதன் மூலம், இந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.

வருவாய்த்துறை அலுவலர் சங்கமும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கமும் இடமாற் றத்தை கண்டித்தும், தேர்தல் கமிஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக வரும் 25-ம் தேதி, மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தர்ணா நடத்த வருவாய்த்துறை அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x