Last Updated : 31 Mar, 2014 11:04 AM

 

Published : 31 Mar 2014 11:04 AM
Last Updated : 31 Mar 2014 11:04 AM

தாம்பரத்தில் மருத்துவமனை அமைக்க வேண்டும்: மத்திய அரசு ஓய்வூதியர்கள் கோரிக்கை

தாம்பரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ மனையை அமைக்க வேண்டும் என்று ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்காக சி.ஜி.எச்.எஸ். எனப்படும் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் சென்னையில் 15 மருத்துவமனை கள் உள்ளன.

ராணுவம், மற்றும் ரயில்வே ஊழியர்கள் தவிர அனைத்து மத்திய அரசு ஊழியர் களும் இங்கு சிகிச்சை பெறலாம்.. இதற்காக அவர்கள் பணியில் இருக்கும்போது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.150 முதல் ரூ.500 வரை பிடிக்கப்படும்.

ஓய்வு பெற்ற பிறகு ஆண்டுக்கு ரூ.1800 முதல் ரூ.6000 வரை கட்ட வேண்டும். ஒவ்வொரு பகுதியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற முடியும்.

தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அப்பகுதியில் மத்திய அரசின் மருத்துவமனை வசதியில்லை. எனவே பணியில் இருப்பவர்கள் சிலர் தொலைவில் உள்ள வேறு சி.ஜி.எச்.எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓய்வு பெற்ற முதியவர்களால் அதிக தூரம் பயணம் செய்ய இயலாத நிலை உள்ளது.

இது குறித்து மத்திய அரசு ஓய்வூதியர்கள் சங்கத்தின் தலை வர் எஸ்.வெள்ளையன் கூறுகை யில், “தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக் கணக்கான ஓய்வூதியர்கள் மருத் துவமனை வசதியில்லாமல் அவதிப் படுகின்றனர்.

ஜம்மு, கோவா, பஞ்சாப் ஆகிய இடங்களில் புதிதாக சி.ஜி.எச்.எஸ் ஆரம்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதே போல் தாம்பரத்திலும் ஆரம்பிக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்,” என்றார். இதே கோரிக்கையை அப்பகுதியில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் பலரும் வலியுறுத்துகிறார்கள்.

கோபாலபுரத்தில் மருத்துவ மனையை குறைந்த எண்ணிக்கை யிலான மக்களே உபயோகிப்பதால் அதை தாம்பரத்துக்கு மாற்றலாம் என்றும் பலர் கருதுகிறார்கள். ஆனால் அதற்கு அங்குள்ள ஊழியர்களும், அதிகாரிகளும் சம்மதித்தால் மட்டுமே மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று சி.ஜி.எச்.எஸ். திட்டத்தின் அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x