Published : 17 Jun 2016 12:11 PM
Last Updated : 17 Jun 2016 12:11 PM
விருதுநகர் மாவட்டத்தில் தனி யார் மூலம், குறைந்த விலை க்கு கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படுவதால், அரசு நேரடியாக கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென தென்னை விவசாயிகள் கோரிக் கை எழுப்பியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஹெக் டேரில் தென்னை சாகுடி செ ய்யப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதி யான ராஜபாளையம், திருவி ல்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் அதிகமாக தென்னை சாகுபடி நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் 200 முதல் 250 டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒரு தேங்காய் ரூ. 2.90-க்கும், கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ.40-க்கும் தனியார் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், தேங்காய்க்கும், கொப்பரைத் தேங்காய்க்கும் உரிய விலை கிடைக்காமல் விருதுநகர் மாவட்ட தென்னை விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
எனவே, தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் கூறியதுபோல் அரசே நேரடியாக கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்து விவசா யிகளை நஷ்டத்திலிருந்து காக்க வேண்டும் என்றும், விருதுநகர் மாவட்டத்தில் உட னடியாக கொப்பரைத் தேங் காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக விவசா யிகள் சங்க மாவட்டச் செயலர் ராமச்சந்திராஜா கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். அரசு கொள்முதல் நிலையம் இல்லாததால், தனியாரிடம் குறைந்த விலையில் தேங்காய் மற்றும் கொப்பரையை விற்பதால் தொடர்ந்து நஷ்டமடைந்து வருகி ன்றனர்.
தமிழகத்தில் தர்மபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஏற்கெ னவே கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
தற்போது, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், வேலூர், மதுரை, நாகை, நாமக் கல், புதுக்கோட்டை, திரு வாவூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொப் பரைத் தேங்காய் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இப்பட்டியலில் விருதுநகர் மாவட்டம் விடுபட்டுள்ளது தென்னை மாவட்ட விவ சாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இம்மா வட்டத்திலும் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலை யம் அமைக்க மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) செல்வம் உள்ளிட்ட அதிகாரி களிடம் கோரிக்கை மனு கொடுத் துள்ளோம்.
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில், இம்மாதம் 27-ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT