Published : 09 Feb 2014 09:50 AM
Last Updated : 09 Feb 2014 09:50 AM

சென்னையில் குடும்ப அட்டைதாரர் குறைதீர்ப்பு கூட்டம்: ஏராளமானோர் பங்கேற்றனர்

சென்னையில் சனிக்கிழமை நடந்த குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 நுகர்வோர் வழங்கல் மண்டலங்களிலும் நடத்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஏராளமான பொது மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அனைத்து மண்டலங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த இந்த முகாம்களில், குடும்ப அட்டையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், குடும்ப அட்டையில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், காணாமல் போன அட்டைகளுக்கு மாற் றாக புதிய அட்டை விண்ணப்பித்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

சேப்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட புதுப்பேட்டை, சென்னை தொடக்கப் பள்ளியில் நடந்த இக்கூட்டத்தில் பங்கேற்ற கிரிஷா என்பவர் கூறுகையில், “எனது கணவர் கடந்த 2007-ம் ஆண்டு மரணமடைந்தார். அவரது பெயரை குடும்ப அட்டையிலிருந்து நீக்கி விட்டு, குடும்பத்தலைவியாக எனது பெயரை மாற்றுவதற்காக வந்தேன். அரை மணி நேரத்திலேயே மாற்றி தந்துவிட்டார்கள்” என்றார். இந்த கூட்டத்தை பற்றி சேப்பாக்கம் மண்டல நுகர்வோர் வழங்கல் துறை துணை அலுவலரான ஷியாமளா கூறுகையில், “கிட்டத்தட்ட 80-க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் பங்கேற்றனர்.சரியான ஆவணங்களுடன் வந்த 70 பேரின் கோரிக்கையினை உடனுக் குடன் தீர்த்து வைத்தோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x