Published : 27 Mar 2014 10:41 AM
Last Updated : 27 Mar 2014 10:41 AM

பெரம்பூரில் ஒரு குடம் குடிநீர் ரூ.5-க்கு வாங்கும் பொதுமக்கள்

பெரம்பூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் தனியார் லாரிகளில் வரும் நீரை விலை கொடுத்து வாங்கி குடித்து வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் உள்ள சில தெருக்களில் குடிநீர் விநியோகத்தில் சில பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, சில தெருக்களில், குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலப்பதால், அந்த குடிநீரைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இப்பிரச்சினை, பெரம்பூர் பகுதியில் அவ்வப்போது தலை தூக்கினாலும், திருநாவுக்கரசு தெரு, முனியப்ப செட்டி தெரு மற்றும் சுற்றியுள்ள மேலும் சில தெருக்களில் தொடர்கதையாக உள்ளதாக அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.

இதனால், தங்களின் அன்றாட குடிநீர் பயன்பாட்டுக்கு தனியாரை நாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். தங்களுக்கு தேவையற்ற கூடுதல் பொருளாதார சுமை ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை யன்று, தனியார் தண்ணீர் லாரி வருவதாகத் தகவல் கிடைத்த தையடுத்து, அதை எதிர்பார்த்துக் காத்திருந்த திருநாவுக்கரசு தெரு மற்றும் முனியப்ப தெரு மக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் அவ்வப் போது கழிவுநீர்க்குழாய் அடைப்பு ஏற்பட்டு சாலையில், வெள்ளம் போல் வழிந்தோடுகிறது. இது பற்றி தொடர்ந்து புகார் அளிப்ப தால் அவ்வப்போது வந்து மெட்ரோ வாட்டர் ஊழியர்கள் சரி செய்துவிட்டுப் போகிறார்கள். ஆனால், மீண்டும் இப்பிரச்சினை ஏற்படுகிறது. இதன் காரணமாக என்னவோ, குடிநீரிலும் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் இப்பகுதிக்கு வரும் தனியார் லாரி யில் ஒரு குடம் ரூ.5-க்கு வாங்கி குடிக்கிறோம். அந்த தனியார் லாரி யும் வாரத்தில் ஓரிரு நாள்கள் மட்டும் வருவதால், அதிக விலை கொடுத்து, தண்ணீர் கேன்களை (ஒன்றின் விலை ரூ.30) வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறோம். எனவே, அதிகாரிகள் எங்கள் தெருவில் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர்.

இது குறித்து விளக்கம் கேட்க சென்னைப் பெருநகர் குடிநீர் வாரியத் துறையினரை தொடர்பு கொள்ளமுயற்சித்தும், பலன் இல்லை.

சென்னை பெரம்பூரில், நீண்ட நாட்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் தனியார் லாரியில் குடம் ரூ.5க்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x