Published : 18 Jan 2017 01:09 PM
Last Updated : 18 Jan 2017 01:09 PM

நெட்டிசன் நோட்ஸ்: ஜல்லிக்கட்டு போராட்டம்- தமிழனாக ஒரே குரல்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இணைய உலகிலும் போராட்டத்துக்கான ஆதரவுக் குரல்கள் வலுத்து வருகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் #JusticeforJallikattu #SaveOurJALLIKATTU #WeDoJallikattu ஆகிய ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்டாகின. இதுகுறித்து நெட்டிசன்கள் பதிவு செய்தவற்றில், தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

தமிழன் ‏@venkirko

கரை வேட்டி இல்ல, கட்சி கொடி இல்ல

மது இல்ல, பிரியாணி இல்ல..

ஒரே குரல் தமிழனாக.

ரியாஸ்

கடல் தண்ணீரை காட்டிலும் இளைஞர்கள், மாணவிகளின் கூட்டம் பெரிதாகக் காட்சியளிக்கிறது. - மெரினா. #JusticeforJallikattu #SaveOurCultureJALLIKATTU

Dhanya Rajendran ‏

மெரினா போராட்டத்தின் முக்கிய முன்னுதாரணங்களில் ஒன்று- போராட்டக்காரர்கள் அவர்களின் குப்பைகளை அவர்களே சுத்தம் செய்துகொள்வது.

வெங்கட் ‏@iVenpu

தலைவனே இல்லாம போராடுறாங்க, ட்ராஃபிக் கரெக்ட் பண்ணி விடுறாங்க, குப்பைய சுத்தம் பண்ணுறாங்க.. பசங்களா, கண்ணு வேர்க்குது!

நாயோன் ‏@writernaayon

மெரினால நைட்டு கரண்ட கட் பண்ணாங்களாம். அவங்க எல்லாம் புயல்ல வாரம் முழுசும் இருட்டுல இருந்தவங்கப்பா!

வெங்கட் ‏@iVenpu

அரசியல்வாதிகள் ஒதுங்கி இருக்குறதே நல்லது. பசங்க பண்ணுறதே மத்திய, மாநில அரசுகளுக்கு பிரஷர் போடும்..

Bharath Prakash ‏@Bharathprakash

பல வேடிக்கை மனிதரைப் போல் வீழ்வேன் என நினைத்தாயோ?

சென்னையன்

சிலிர்க்க வைத்த தருணம் அது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் கடைக்காரர் கோக், பெப்சியை நீட்டுகிறார். மறுத்த இளைஞர்கள் சொன்னார்கள், செத்தாலும் பரவால்ல.. இத தொட மாட்டோம். லவ் யூ பசங்களா!

JusticeforJallikatu ‏@rajaforever1985

கலாம் அய்யா சொன்னது காளைகளால் மெய்யாகப்போகிறது. சாதி, மதம் கடந்த போராட்டம். வீரத்தமிழன் வீழமாட்டான்.

Vignesh K ‏@vigneshk10

5 வருஷத்துக்கு ஒருதடவ உங்க கோபத்தை காட்டுனா ஆட்சி மாற்றம் வருதுல்ல. அடிக்கடி உங்க கோபத்தை காட்டுங்க அரசியல் மாற்றமே வரும். #JusticeforJallikattu

unlucky guy ‏@sureshvijay412

என்னிடம் காளையும் இல்லை..

நான் ஜல்லிக்கட்டு வீரனும் இல்லை.

ஆனால் என் பாரம்பரியத்தை விட்டுத்தரும் எண்ணம் இல்லை.

Mishieka ராம்குமார் ‏@mishiekaram

போராடப் போகிறேன் என்று குழந்தைக்கு சொல்லிவிட்டு செல்லவும். அது நாம் கற்றுக்கொடுக்கும் பெரிய பாடம்.

SHANKAR CHIYAAN ‏@ShankarNaresh1

போராட்டம் முழுமையாக இளைய சமுதாயம் கைகளுக்கு சென்றுவிட்டது. விரைவில் வெற்றி. #JusticeforJallikattu

Shan Karuppusamy

இப்போது ஒவ்வொருவரும் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். பீட்டாவைத் தடை செய்வது, முதல்வர் அறிக்கை விடுவது, வாடிவாசலைத் திறப்பது, நாட்டு மாடுகளைக் காப்பது, விவசாயிகள் மரணத்தைத் தடுப்பது, சட்டத்தைத் திருத்துவது இப்படி. அது தீர்வை நோக்கிய பயணமாக இருக்காது. நாட்டு மாடுகளைக் காப்பதற்காக #AmendPCA போன்ற கோரிக்கைகளை குறிப்பாக வலியுறுத்திப் போராட வேண்டியது அவசியம். சட்டரீதியான தீர்வு மட்டுமே நிரந்தரமான தீர்வாக இருக்க முடியும்.

P Kathir Velu

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம் இப்போதைய அவசியம். இந்தப் போராட்டம் இத்தோடு நின்று விடாமல் நீர்நிலைகளைப் பாதுகாப்பதை நோக்கித் திரும்பவும் வேண்டும். வெகு விரைவில் நாம் சந்திக்கவிருக்கும் பிரச்சினை வறட்சியும் குடிநீர் தட்டுப்பாடும்தான்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x