Published : 12 Sep 2016 09:59 AM
Last Updated : 12 Sep 2016 09:59 AM

ஸ்ரீரங்கம், பழநி கோயில்களில் 5-ம் ஆண்டில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்: 4 ஆண்டுகளில் உணவருந்தியோர் 1.08 கோடி பக்தர்கள்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மற்றும் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இந்த 2 கோயில்களிலும் இதுவரை மொத்தம் 1.08 கோடி பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக 2002-ம் ஆண்டு மார்ச் 23-ல் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறநிலையத் துறை சார்பில் அன்னதானத் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் 360 கோயில்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அடுத்து வந்த திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் 2 கோயில்களில் மட்டுமே புதிதாக தொடங்கப்பட்டது.

மீண்டும் 2011-ம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 2011-12ல் 106 கோயில்களிலும், 2012-13ல் 50 கோயில்களிலும், 2013-14ல் 100 கோயில்களிலும், 2014-15ல் 106 கோயில்களிலும் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்தக் கோயில்கள் அனைத்திலும் ஒரு வேளை மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதன்முறையாக ரங்கம் ரங்கநாதர் கோயிலில் 2012-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் வந்து தொடங்கிவைத்தார். அன்றே பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் காலை 8 முதல் இரவு 10 மணி வரை கோயிலுக்கு வரும் பக்தர்களை அமர வைத்து, இலை போட்டு உணவு பரிமாறப்பட்டு வருகிறது. இதற்காக, ரங்கம் கோயிலில் ரூ.99 லட்சம் மதிப்பில் ஒரே நேரத்தில் 400 பேர் உணவருந்த வசதியாக புதிதாக அன்னதானக் கூடம் கட்டப்பட்டது. இங்கு தினமும் ஏறத்தாழ 3,500 பக்தர்களும், பழநி கோயிலில் தினமும் ஏறத்தாழ 6 ஆயிரம் பக்தர்களும் உணவருந்தி வருகின்றனர். தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் ரங்கம் கோயிலில் கடந்த 4 ஆண்டுகளில் ஏறத்தாழ 37 லட்சம் பேரும், பழநி கோயிலில் 71 லட்சம் பேரும் உணவருந்தி உள்ளனர்.

கனிவுடன் பரிமாறப்படுகிறது

இதுகுறித்து, ரங்கம் ரங்க நாதர் கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான ஜெய ராமன் கூறியதாவது: கோயிலுக்கு வரும் பக்தர்கள் பல ஊர்களில் இருந்து பல்வேறு சூழ்நிலைகளில் வருகின்றனர். இறைவனை வழிபட வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின்னர், வயிறார உணவு வழங்கப்படுகிறது. அனைவரையும் இருக்கையில் அமர வைத்து இலை போட்டு, சாப்பாடு, சாம்பார், ரசம், மோர் மற்றும் கூட்டு, பொரியல், அப்பளம் உள்ளிட்டவைகளுடன் கனிவுடன் உணவு பரிமாறப்படுகிறது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு செப்டம்பர் 12-ம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-ம் ஆண்டு தொடங்க உள் ளது. இந்தத் திட்டத்துக்கு பக்தர் களிடம் பெரும் வரவேற்பு உள் ளது. அறநிலையத் துறை சார்பில் இந்தப் பணி சிறப்புடன் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. நவீன வசதி யுடன் கூடிய சமையல் கூடத்தில் சுகாதாரமான முறையில் சமையல் செய்யப்படுகிறது. பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங் கப்படுகிறது. மேலும், உணவருந்த வந்து காத்திருப்போர் அமர் வதற்காக, காத்திருப்போர் கூடமும் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x