Published : 26 Feb 2014 10:32 AM
Last Updated : 26 Feb 2014 10:32 AM
டிசிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்த பெண் இன்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் சிபிசிஐடி போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்த பெண் இன்ஜினீயர் உமா மகேஸ்வரி (23) கடந்த 13-ம் தேதி காணாமல் போனார்.
உமா மகேஸ்வரியின் உடல் அழுகிய நிலையில் சிப்காட் வளாகத்தில் உள்ள புதர் பகுதியில் 22-ம் தேதி மீட்கப்பட்டது.
வழக்கில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவர் மேற்குவங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT