Published : 09 Aug 2016 09:32 AM
Last Updated : 09 Aug 2016 09:32 AM
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்து வர்த்தகப் பிரமுகர்களி டம் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது.
இந்தியாவில் ஒரே வரி முறையை அமல்படுத்தும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நாடாளு மன்ற இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு நிறை வேற்றப்பட் டுள்ளது. இந்த வரி விதிப்பு முறைக்கு பெரும்பாலான வர்த்தகர்கள் ஆதரவு அளித்தாலும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்டி மசோதா குறித்து வர்த்தகர்களின் கருத்து:
தொழில், வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.ரத்தினவேல்:
ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப் பட்ட நாள் இந்திய மறைமுக வரிகள் வரலாற்றின் பொன்நாள். இவ்வரிக்காக முதலில் இருந்தே குரல் கொடுத்து வருகிறோம். தொழில் வணிகத் துறையின ரின் நீண்ட நாள் கனவு இது. தற்போது மத்திய அரசு விதிக் கும் கலால்வரி, சேவை வரி, மத்திய விற்பனை வரி, மாநில அரசுகள் விதிக்கும் மதிப்புக்கூட்டு வரி, கேளிக்கை வரி, ஆடம்பர வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகளையும் ரத்து செய்துவிட்டு ஒரே வரியாக நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி அம லாக்கப்படுகிறது. ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி என்ற சூழலை உருவாக்குவதன் மூலம் சிறந்த பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். வர்த்தகர் மட்டுமின்றி, நுகர்வோருக்கும் நல்லதாகவே இருக்கும்.
தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம்:
இந்த மசோதா அமல்படுத் தப்பட்டால் தமிழகத்தில் சிறு வணிகர்கள், தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். தமிழகத்தில் வரியே இல்லாமல் 599 பொருட்கள் உள்ளன.
1 சதவீத வரியில் 23, 2 சதவீத வரியில் 1, 4 சதவீத வரியில் 1, 5 சதவீத வரியில் 748, 14.5 சதவீத வரியில் 480 பொருட்கள் என்ற நிலை வாட்வரியில் உள்ளது. ஜிஎஸ்டி வரியில் 100 பொருட்களுக்கு மட்டுமே வரிவிலக்கு என்றும், குறைந்தபட்சமாக 12 முதல் 20 சதவீதம்வரை வரி விதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் வரியே இல்லாத பொருளுக்கு 20 சதவீதம்வரை வரி விதிக்கப்படு வதால் அனைத்து பொருட்களின் விலையும் உயரும். எந்த பிரச்சி னை என்றாலும் ஜிஎஸ்டி உயர்மட்ட கவுன்சிலில்தான் முறையிட முடியும். வேறு எந்த வழியிலும் மாற்றங்களை கொண்டுவரவே முடியாது. 10 சதவீத கடைகளில்கூட இன்னும் கணினி வசதி இல்லை. இவர்களால் ஜிஎஸ்டி முறையை பின்பற்ற இயலாது. அரிசி, பருப்பு என முக்கிய உண வுப்பொருட்கள் வெளிமாநிலங்க ளிலிருந்துதான் தமிழகத்துக்கு வருகிறது. ஜிஎஸ்டி அமலானால் லாரி வாடகை உள்பட அனைத் தும் அதிகரிக்கும் என்பதால், இதற்கேற்ப விலைவாசி கடுமை யாக உயரத்தான் செய்யும். சிறு தொழில்களை காக்கும் வகையில் வரிவிதிப்பு இருக்க வேண்டும்.
தொழில், வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன்:
ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5 முதல் 2 சதவீதம்வரை வளர்ச்சி காணும். வரி மீது வரி மீண்டும், மீண்டும் விதிக்கப்படாது என்பதால் பல பொருட்களின் விலை குறையும். வரி ஏய்ப்பைவிட வரி செலுத் துவதே புத்திசாலித்தனமானது என்ற நிலை உருவாக்கப்படுவ தால் மத்திய, மாநில அரசுகளின் வரிவருவாய் உயரும்.
இந்த நிதிமூலம் பிரதமரின் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் ஆகிய திட்டங்கள் நல்ல ஊக்கத்தைப் பெறும். வெளிநாட்டு முதலீடுகள் குவியும். வெளிநாடுகளுக்கு சென்று தொழில் செய்யலாம் என்ற நிலையில் மாற்றம் ஏற்பட்டு, பல தொழில்கள் உள்நாட்டிலேயே உருவாகும்.
சிவகாசி பட்டாசு மொத்த உற்பத்தியாளர் எஸ்.னிவாசன்:
நாடு முழுவதிலும் மிகச்சிறந்த தகவல் தொடர்பு வசதியுடன் கணினிமயமாக்கப்பட்டால் சரக்கு மற்றும் சேவைவரி அமலாக்கம் மிகப்பெரிய வரப்பிரசாதம். பெரிய மாநிலங்களில் இதன் பலன் மேலும் அதிகமாக இருக்கும். கேரளா போன்ற மாநிலங்களில் உற்பத்தி குறைவு, அதே நேரம் நுகர்வு அதிகம். ஜிஎஸ்டி வரி அமல்படுத்துவதன் மூலம் உற்பத்தி, நுகர்வில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் மாநிலங்களின் வளர்ச்சி சீராக இருக்கும். பொருளின் உற்பத்தி முதல் உபயோகம்வரை முழுமை யான கண்காணிப்பு இருந்தால் இந்தவரி விதிப்பு மிகப்பெரிய வெற்றியைத்தரும். ஜிஎஸ்டி முழுமையாக அமலாகும்போது வரி ஏய்ப்பு முழுமையாக தவிர்க்கப்படும். மூலப்பொருளை நாட்டின் எந்த மூலையில் கொள்முதல் செய்தாலும் அதன் உள்ளீட்டு வரியை திரும்பப் பெறலாம்.
எந்த பொருளுக்கும் 18 சதவீதத்துக்கும் மேல் வரி விதிக்கக்கூடாது. வரி ஏய்ப்பு குறைவதால், உறுதியாக பொருட்களின் விலையும் குறையும். முக்கிய வர்த்தக சங்கங்களை உறுப்பினர்களாக் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும்.
இயந்திர உதி ரிபாகங்கள் உற்பத்தியாளர் ஏ.செல்வராஜ்:
1991-ம் ஆண்டில் உலகமயமாக் கப்பட்ட பொருளாதார சீர்திருத் தத்துக்குப்பின் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றமே ஜிஎஸ்டி. 10 ஆண்டுகளாக இந்த வரிமுறையை கேட்டு போராடி வருகிறோம். பொருளை வாங்குவோர் மட்டுமே வரி செலுத்துவதால் உற்பத்தி செலவு வெகுவாக குறையும். இதனால் பலமடங்கு உற்பத்தி அதிகரிப்பதால், வேலைவாய்ப்பும் அதிகரித்து நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மேம்படும். உலக நாடுகளுடன் போட்டியிட இது பெரிதும் உதவும்.
ஆன்லைன் வர்த்தகம், டெலிகாம், ஆட்டோ மொபைல் என பல்வேறு துறை களும் அபார வளர்ச்சி பெறும். வரி ஏய்ப்பு தடுக்கப்படும். அரசின் வரிவருவாய் உயரும். இந்த நிதி நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும். சில பொருட்களின் விலை அதிகரிப்பது போன்ற நிலை ஏற்பட்டாலும், பல பொருட்களின் விலை குறையும். சராசரியாக மக்களுக்கு பாதிப்பு இருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT