Published : 23 May 2017 09:05 AM
Last Updated : 23 May 2017 09:05 AM

நீடிக்கும் தட்டுப்பாடு, விலை ஏற்றம்: மணல் குவாரிகளில் நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா?

தமிழகத்தில் கட்டுமானப் பணி களுக்கு தேவைப்படும் ஆற்று மணலுக்கு கடந்த ஒரு மாதமாக நிலவும் தட்டுப்பாட்டை போக்கவும், விலை ஏற்றத்தைத் தடுக்கவும் குவாரிகளின் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி, கரூர் மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் செயல்பட்ட மணல் குவாரிகள் கடந்த மாதத்தில் மூடப்பட்டு, 12 தினங்களுக்கு முன்னர் பொதுப்பணித் துறையின் மூலம் திறக்கப்பட்டன. இதில், திருச்சி மாவட்டத்தில் புதிதாக சில இடங் களில் குவாரிகள் திறக்கப்பட்டு, மணல் எடுக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. குவாரிகளில் மணல் ஏற்றிச் செல்ல நூற்றுக் கணக்கான லாரிகள் நாள்தோறும் காத்திருக்கின்றன.

இங்கு உள்ள குவாரிகளில் இருந்து 2 யூனிட் மணல் ரூ.1,050-க்கு வாங்கப்பட்டுசென்னையில் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப் படுகிறது. இதனால் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் ஏராளமான கட்டு மான நிறுவனங்கள் இந்த மணலை எதிர்பார்த்துள்ள நிலை யில், வெளியூர் லாரிகளை 4 நாட் களுக்கும் மேலாக குவாரிகளில் காக்க வைப்பதால், ஓட்டுநர் சம்ப ளம், படி என செலவு அதிகரித்து, மணலை அதிக விலைக்கு விற்க வேண்டியுள்ளது என்கின்றனர் மணல் லாரி உரிமையாளர்கள்.

இதுகுறித்து சென்னையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் தாம்பரம் நாராயணன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்துவது மிகவும் சரி யான நடவடிக்கை. ஆனால், பொதுப்பணித் துறை முறையாக திட்டமிடாததால் மணல் கிடைப்ப தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதனால், கட்டுமானத் தொழில் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. சென்னையில் ரூ.10 ஆயிரத்துக்கு கிடைத்து வந்த ஒரு லோடு மணல் விலை, தற்போது ரூ.30 ஆயிரத்துக்கு உயர்ந்துவிட்டது.

தற்போது திருச்சியில் இருந்து தான் சென்னைக்கு மணல் வரு கிறது. அரசே மணல் குவாரிகளை ஏற்றுள்ளதால், கட்டுமானப் பணி களுக்கு பாதிப்பில்லாமலும் அதே நேரத்தில் விலையைக் கட்டுக்குள் வைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக பொதுப்பணித் துறை வட்டாரங்களில் விசாரித்த போது, “திருச்சி மாவட்டத்தில் தற்போது 6 குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் மேலும் 3 குவாரிகள் திறக்கப்படும். தமிழ கத்தின் ஒருநாள் மணல் தேவை ஏறத்தாழ 10 ஆயிரம் லோடு. ஆனால், தற்போது 6 குவாரிகளிலும் சேர்த்து அதிகபட்சமாக 2 ஆயிரம் லோடுதான் ஏற்றப்படுகிறது. ஒரு குவாரியில் 2 மணல் அள்ளும் இயந்திரங்களை மட்டுமே பயன் படுத்த வேண்டும். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரைதான் மணல் எடுக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றன.

நாளொன்றுக்கு ஒரு குவாரியில் 300 லோடு மணல் ஏற்றப்படுகிறது. இதற்கு அதிகமாக மணல் எடுக்க முடியாது. மேலும், 10 நாட்களுக்கு மேலாக குவாரிகள் மூடப்பட்டிருந்த தால், மணலின் தேவை அதிகரித்து விட்டது. அனைத்து குவாரிகளை யும் திறந்தால் மட்டுமே ஓரளவுக்கு தட்டுப்பாடு நீங்கும்” என்றனர்.

“மணல் தட்டுப்பாட்டைப் போக்க உரிய திட்டமிடுதல்களுடன், கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். வெளிச்சந்தை மணலுக் கான விலையையும் அரசே நிர்ண யிப்பதுடன், வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்கின்றனர் கட்டுமா னத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x