Published : 26 Jul 2016 08:15 AM
Last Updated : 26 Jul 2016 08:15 AM

669 பூங்காக்களில் விரைவில் வைஃபை வசதி: முதல்வரின் உத்தரவை தொடர்ந்து மாநகராட்சி தீவிரம்

சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் 669 பூங் காக்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதற் கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி பராமரிப் பில் 503 பிரதான பூங்காக்களும், 166 சாலையோரப் பூங்காக்களும் உள்ளன. மேலும் தனியார் பங்களிப் புடன் புதிய பூங்காக்களை உரு வாக்கும் முயற்சியிலும் மாநகராட் சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

முன்பு மாநகராட்சி பூங்காக்கள் மதுக்கூடங்களாக கிடந்தன. இந்நிலையில் சில ஆண்டுக ளாக மாநகராட்சி மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளால் பூங்காக்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. இதனால் திரைத் து றையினர் மற்றும் தொலைக்காட்சி நாடகத் துறையினர் தற்போது மாநகராட்சி பூங்காக்களில் காட்சி களை படமாக்குவது அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, இது நாள் வரை படமாக்குவதற் கு இலவசமாக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனிவரும் காலங்களில் கட்டணம் வசூலிக் கவும், அதற்கான கட்டணத்தை நிர்ணயிக்கவும் மாநகராட்சி திட்ட மிட்டுள்ளது.

மாநகராட்சி பூங்காவுக்கு பொதுமக்களை அதிக அளவில் ஈர்க்கும் விதமாக, பூங்காக்களின் சிறப்பம்சங்கள் இடம்பெற்ற வீடியோ காட்சிகளை, யூடியூபில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளையும் மாநகராட் சி நிர்வாகம் எடுத்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, பொது மக்களை மேலும் கவர்ந்திழுக்கும் விதமாகவும், முதல்வர் ஜெயல லிதாவின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற் றும் வகையிலும், மாநகராட்சி பராமரிப்பில் 669 பூங்காக்களிலும் வைஃபை வசதி வழங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பூங்காக்களில், அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து வைஃபை வசதிகளை வழங்க திட்டமிட்டிருந்தோம். இதற்கிடை யில் அனைத்து பூங்காக்களிலும் வைஃபை வசதியை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, உடனடியாக அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து கோப்பு களை தயார் செய்து, திட்டத்தை நிறைவேற்றுமாறு ஆணையர் டி. கார்த்திகேயனுக்கு அறிவுறுத்தியுள் ளார். ஆணையரும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றார்.

வைஃபை பயன்படுத்துவதற் கான கட்டணம் குறித்து அரசு கேபிள் டி.வி. நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மக்கள் அதிக அளவில் கூடும் மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் மெரினா கடற்கரையில் வைஃபை வசதி வழங்குவதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றன. இதுவரை கட்டண நிர்ணயம் குறித்து, எந்த தகவலும் எங்கள் நிறுவனத்துக்கு அரசு தெரிவிக்கவில்லை. அரசு நிர்ணயம் செய்த பின்னரே அதை அறிவிக்க முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x