Published : 24 Feb 2014 12:00 AM
Last Updated : 24 Feb 2014 12:00 AM
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாதி மறுப்பு இணை தேடல் நிகழ்ச்சியில், காதல் ஜோடிக்கு தி.க. தலைவர் கி.வீரமணி திருமணம் நடத்தி வைத்தார்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கடந்த 40 ஆண்டுகளாக பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையம் சார்பில், ‘மன்றல் 2014’ என்ற பெயரில் சாதி மறுப்பு இணை தேடல் நிகழ்ச்சி, பெரியார் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் சாதி மறுப்பு திருமணம் செய்ய விரும்பிய 61 பேர், மத மறுப்பு திருமணம் செய்ய விரும்பும் 28 பேர், மாற்றுத் திறனாளிகள் 22 பேர், விவாகரத்து பெற்றவர்கள் 44 பேர், துணையை இழந்தோர் 17 பேர் என மொத்தம் 172 பேர் பங்கேற்றனர்.
வழக்கறிஞர், சாப்ட்வேர் இன்ஜினீயர், உணவு விடுதி துணை மேலாளர், நகை செய்யும் தொழிலாளி என பலரும் மேடையில் தோன்றி, தங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு, இணையைத் தேடினர். 62 வயதான ஓய்வுபெற்ற போலீஸ்காரர் ஒருவர், ‘கணவரை இழந்த, 30 முதல் 48 வயதுக்குட்பட்ட, குழந்தை இல்லாத பெண் தனக்கு துணையாக வேண்டும்’ என கூறினார்.
பங்கேற்ற 172 பேரில், 14 பேர் தங்க ளுக்கான இணையை தேர்வு செய்தனர். அதில், இருவர் மாற்றுத்தி றனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் ஜோடிக்கு திருமணம்
விருதுநகர் மாவட்டம் நடுவப் பட்டியைச் சேர்ந்த பார்த்திபன் (24) - காளியம்மாள் (25) என்ற காதல் ஜோடியும் இந்நிகழ்ச்சியில் பங்கேற் றது. வெவ்வேறு சாதியைச் சேர்ந்த தங்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர்கள் கூறினர். அந்த ஜோடிக்கு விழா மேடையிலேயே தி.க. தலைவர் கி.வீரமணி சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரியார் சுயமரி யாதை நிறுவன இயக்குநர் திருமகள் இறைவன், மன்றல் நிகழ்வின் ஒருங் கிணைப்பாளர் அன்புராஜ், வழக்கறிஞர் பிரசன்னா, திரைப்பட இயக்குநர் நவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT